IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

இஸ்ரோ விஞ்ஞானி கொலையின் பின்னணி என்ன? போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!!

0

இஸ்ரோ விஞ்ஞானி அவரது வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்ததால் மனைவி அதிர்ச்சி அடைந்தார். விஞ்ஞானி கொடூரமாக கொல்லப்பட்டது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


கேரளாவை சேர்ந்தவர் சுரேஷ். இவர் 20 வருடமாக ஹைதராபாத்தில் உள்ள இஸ்ரோவின் தேசிய ரிமோட் சென்சிங் மையத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி இந்திரா சென்னையில் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுடைய மகன் அமெரிக்கவிலும், மகள் டெல்லியிலும் வசித்து வருகின்றனர். இந்திராவும், சுரேஷூம் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.




இந்த நிலையில் நேற்று விஞ்ஞானி சுரேஷ் அலுவலகம் செல்லவில்லை. இதனால் உடன் பணிபுரிபவர்கள் போன் செய்து பார்த்துள்ளனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. உடனடியாக அவருடைய மனைவிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மனைவி இந்திராவும் போன் பண்ணி பார்த்துள்ளார். அவருக்கு போன் போகவே இல்லை. இதனால் பதறிப்போன இந்திரா ஹைதராபாத்தில் இருக்கும் வீட்டிற்கு வந்துவிட்டார்.


வீடு பூட்டி இருந்தது. கதவை தட்டியும், விஞ்ஞானி சுரேஷ் கதவை திறக்கவில்லை. இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பிறகு உள்பக்கமாக பூட்டியிருந்த வீட்டு கதவை போலீசார் உடைத்து திறந்து வீட்டின் உள்ளே சென்றனர்.

கள்ளக்காதலியின் நல்ல காதலுக்கு துணைபோன வாலிபர் வெட்டிக் கொலை! பரபரப்பு தகவல்கள்


வீட்டுக்குள் விஞ்ஞானியை பார்த்ததும் மனைவி இந்திரா அலறி துடித்தார். விஞ்ஞானி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதையடுத்து போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை செய்ய தொடங்கினர். முதல் கட்ட விசாரணையில் விஞ்ஞானி சுரேஷை யாரோ தலையில் பலமாக தாக்கியது தெரியவந்துள்ளது.


மேலும் போலீசார் பல கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். விஞ்ஞானியை கொன்றது யார்? எதற்காக விஞ்ஞானி கொலை செய்யப்பட்டார்? என விசாரித்து வருகின்றனர். விஞ்ஞானி சுரேஷ் அபார்ட்மென்டில் சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்து வருகின்றனர். இருப்பினும் பிரேத பரிசோதனைக்கு பிறகே அவர் எப்படி கொல்லபட்டார் என்பது தெரிய வரும் என்று போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தால் சக விஞ்ஞானிகளும் பயத்தில் உள்ளனர்.

#scientist #kerala #murdered #hyderabad #crime