Primary Menu

Top Menu

July 20, 18

ஹிஜாப் ! ஈரானுக்கு செல்ல மறுக்கும் இந்திய செஸ் வீராங்கனை

ஈரானில் பெண்கள் கட்டாயம் ஹிஜாப் (தலைமுடியை மறைக்கும் துணி) அணிய வேண்டும் என்ற விதி தனது தனிப்பட்ட உரிமைகளுக்கு எதிராக உள்ளதால், அங்கு நடக்கவுள்ள ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை என செஸ் வீராங்கனை சௌமியா சுவாமிநாதன் அறிவித்துள்ளார்.

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடர், ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 4 வரை ஈரானில் நடக்க உள்ளது. இதில் கலந்துகொள்ள இந்தியாவை சேர்ந்த சௌமியா சுவாமிநாதன் தேர்வாகியிருந்தார்.

உலக ஜூனியர் பெண்கள் பட்டம், பெண்கள் கிராண்ட் மாஸ்டர் பட்டம் உள்பட பல பட்டங்களைப் பெற்ற செளமியா, உலக பெண் செஸ் போட்டியாளர்கள் தர வரிசையில் 97 வது இடத்திலும், இந்திய அளவில் 5வது இடத்திலும் உள்ளார்.

1979-ம் ஆண்டு ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சிக்கு பின்னர், ஈரானில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஈரானுக்கு செல்லும் வெளிநாட்டுப் பெண்களும் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும்.

இந்நிலையில், கட்டாயத்தின் பெயரின் ஹிஜாப் அணிந்துகொண்டு போட்டியில் கலந்துகொள்ள தமக்கு விருப்பம் இல்லாததால் ஈரானில் நடக்கும் ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ளபோவதில்லை என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சௌமியா கூறியுள்ளார்.

ரொனால்டோவை யுவான்டஸ் அணிக்கு விற்றது தவறு

ரியல் மாட்ரிட் அணியின் வீரர்...

Leave a Reply