IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

இன்ஸ்டாகிராமில் IOS-13 சாதனத்திற்கான புதிய அப்டேட் வெளியீடு

0 14

100 கோடிக்கும் மேலான பயனாளர்கள் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம் ஆப்ஸின் புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. இன்ஸ்டாகிராமானது தனது ஐ.ஓ.எஸ் சாதனங்களுக்கான தனது அப்ளிக்கேஷனை அப்டேட் செய்து வெளியிட்டுள்ளது.

இந்த அப்டேட்டில் Dark Mode வசதியினை உள்ளடக்கியுள்ளது. இரவு நேரங்களில் அல்லது பயனர்களின் சூழலுக்கேற்ப ஒளி குறைவாக உள்ள நிலையில் மொபைல் சாதனங்களை பயன்படுத்தும் போது பயனாளர்களின் கண்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு விடுகின்றன. இதனை தவிர்ப்பதற்காகவே மொபைல் அப்ளிக்கேஷன்களில் டார்க் மோட் வசதியை அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த வசதியை முன்னணி அப்ளிக்கேஷன்களில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் தனது iOS-13 சாதனத்திற்கான பதிப்பில் புதிய வசதியினை உள்ளடக்கியுள்ளது. இந்த வசதி தற்போது பயனாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
#Instagram #iOS #DarkMode #Update #In4Net