Primary Menu

Top Menu

October 20, 18

தல வேற லெவல் ! இன்ஸ்டாகிராமில் பதில் சொன்னது விஜய் மகன் தானா?

சமூக வலைதளங்களில் பரவும் தல – தளபதி பற்றிய தகவல்களுக்கு எப்போதுமே ஒரு தனி மவுசு உண்டு.

இவ்வேளையில் சமீபத்தில் விஜய் மகன் சஞ்சய் குறும்படத்தில் நடித்திருக்கிறார் என்பதும் வைரலாகப் பரவியது. அதே போல, இன்று (அக்.12) காலை முதலே விஜய்யின் மகன் சஞ்சய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்விகளுக்குப் பதிலளித்திருக்கிறார் என்று பல ஸ்கிரீன் ஷாட்கள் பரவின.

இதில் ”விஜய்க்கு பிறகு யாரைப் பிடிக்கும்” என்பதற்கு ”அஜித் மற்றும் விஜய்சேதுபதி” என்றும், ”யாருடன் நடிக்க விருப்பம்” என்பதற்கு ”அப்பா, அஜித் மற்றும் விஜய் சேதுபதி” என்றும் பதில்கள் தெரிவிக்க, அது வைரலானது. மேலும், ”தல பண்ற ஸ்பெஷல் பிரியாணி சாப்பிட்டுள்ளீர்களா” என்பதற்கு ”ஒரே ஒரு முறை.. அது வேற லெவல்” என்றும், ”தலயைப் பற்றி” எனக் கேட்டதற்கு ”கெத்தானவர்” என்றும் இன்ஸ்டாகிராமில் பதிலளித்திருக்கிறார்கள்.

விஜய் மகன் சஞ்சய் அஜித்தைப் பற்றி மிகவும் பாராட்டிப் பேசியிருப்பதால், அஜித் ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வந்தார்கள். இந்தப் பதில்களைக் கூறியது விஜய்யின் மகன் தானா என்ற கேள்வியும் எழுந்தது.

இந்நிலையில் விஜய்யின் மகன் சஞ்சய், மகள் திவ்யா சாஷா இருவருமே எந்த சமூக வலைதளங்களிலும் இல்லை. தயவுசெய்து தளபதி ரசிகர்கள் யாரும் இந்தப் போலிக் கணக்குகளுக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டாம் என அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம் பரவிய பதிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

உலகளவில் சாதனை படைத்த “சர்கார்”

‘சர்கார்’ படத்தின் டீசரை நேற்று மாலை 6...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon