Primary Menu

Top Menu

September 21, 18

ராணுவ வீரர்கள் மீது கல்வீசிய இளைஞர்கள் : பாகிஸ்தான் சம்பளம்

காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் இந்திய ராணுவ அதிகாரிகள் வந்த வாகனத்தின் மீது இளைஞர்கள் கல்வீசி தாக்குதல் ஈடுபட்டனர். கல்வீச்சின் காரணமாக ராணுவ வீரர்கள் வந்த வாகனம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனைத்தொடர்ந்து அந்த வாகனத்தில் இருந்த இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர்.

ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. அப்போதும் பல இளைஞர்கள் ராணுவ வீரர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அவர்கள் மீது கல்வீசி தாக்கினர். அப்போது நடந்த வன்முறையின் போது 3 இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கற்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதால் 60-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர்.

ராணுவத்தினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய சில இளைஞர்கள், CCTV கேமராக்கள் துணையுடன் அடையாளம் காணப்பட்டனர். அவர்களை பிடித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.

பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளின் ரகசிய இருப்பிடங்களை கண்டறிந்து வேட்டையாடும் போது, சண்டை நடைபெறும் குறிப்பிட்ட இடத்தை வாட்ஸ்-ஆப்’ மூலம் பாகிஸ்தான் தரப்பிலிருந்து தங்களுக்கு தகவல் அனுப்பப்படும் என்று தெரிவித்தனா்.

பின்னர் அந்த இடத்திற்கு கற்களுடன் விரைந்து சென்று, ராணுவத்தினர் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி காயப்படுத்தி தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியை தொய்வுற செய்வதாக குறிப்பிட்டனர். இதற்காக பாகிஸ்தான் தரப்பிலிருந்து தங்களுக்கு மாதந்தோறும் சுமார் ரூ.5,000 முதல் ரூ.20,000 சம்பளம் வழங்கப்படுவதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.

Comments

விமானத்தை முந்திச் சென்ற மோட்டார் சைக்கிள்! – விநோதமான போட்டி

துருக்கியில் நடைபெற்ற வினோத போட்டியில்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon