Primary Menu

Top Menu

September 25, 18

எரிசக்தி & விவசாயம் : இந்தியாவில் முதலீடு செய்துள்ளது நெதர்லாந்து !!

நெதர்லாந்து நாட்டுடன், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில், உறவுகளை பலப்படுத்த முடிவு செய்துள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஐரோப்பிய நாடான, நெதர்லாந்தின் பிரதமர், மார்க் ரூட்டே, இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்தியாவில், 1.56 லட்சம் கோடி ரூபாய், நெதர்லாந்து முதலீடு செய்துள்ளது. இந்தியாவில் முதலீடு செய்துள்ள நாடுகளில், நெதர்லாந்து ஐந்தாவது இடத்தில் உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே, 37 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது. இதை, மேலும் அதிகரிக்க இரு நாடுகளும் முயற்சித்து வருகின்றன.

பிரதமர் மோடி பேசியதாவது :

நாட்டில் பொருளாதார சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்ற என் கொள்கையில் உறுதியாக இருக்கிறேன். இரு தரப்பு உறவை தாண்டி, பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சு நடத்தினோம். சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டமைப்பில் இணையும்படி, நெதர்லாந்துக்கு அழைப்பு விடுத்திருந்தோம்; அதை ஏற்று, இந்தக் கூட்டமைப்பில் இன்று நெதர்லாந்து இணைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவை மேலும் பலப்படுத்த, இந்த சந்திப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon