Primary Menu

Top Menu

September 25, 18

சொந்த வீடு என்பதே என் கனவு : மோடி

  குஜராத் மாநிலம்  வல்சாத் நகரில் உள்ள ஜுஜ்வா கிராமத்தில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா   திட்ட பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அப்போது  அவர் கூறியதாவது:-
 குஜராத் எனக்கு நிறைய கற்று கொடுத்தது. இந்த பாடம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் கனவுகள் நிறைவேற்ற எனக்கு கற்று கொடுத்து உள்ளது. என் கனவு என்னவென்றால் 75 ஆண்டு சுதந்திர தினம்  கொண்டாடும் போது  நாடு 2022 இல்  சொந்த வீடு இல்லாத குடும்பம் இருக்க கூடாது.
தாய்மார்களும் சகோதரிகளும் திருப்திகரமாக சொல்ல முடியும்,  குடும்பம் வீடு எப்படி இருக்கும் என்று தீர்மானிக்கலாம்,.என்ன பொருள் பயன்படுத்த வேண்டும்  மற்றும் அது எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிக்கலாம். இப்படி ஒரு குடும்பம் அதன் சொந்த வீட்டை  அமைக்கிறது . அது சிறந்ததாக அமைகிறது. என கூறினார்.மத்திய அரசின் இந்த முக்கிய திட்டத்தின் கீழ் மாநிலத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனாவின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் உயர்ந்த தரம் வாய்ந்தவையாக இருக்கும். யாரும் இதற்கு ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை.

பின்னர் பிரதமர்  குஜராத் தடயவியல் விஞ்ஞான பல்கலைக்கழகம் மற்றும் ராம் பவனில் சோம்நாத் கோயில் அறக்கட்டளை விழாவில் கலந்து கொண்டார்
Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon