Primary Menu

Top Menu

October 22, 18

இந்திய தொழில் துறை உற்பத்தியில் வளர்ச்சி

இந்தியாவின் தொழில் துறை உற்­பத்தி, ஏப்­ர­லில் 4.9 சத­வீ­த­மாக வளர்ச்சி கண்­டுள்­ளது. இது மார்ச்­சில் 4.4 சத­வீ­த­மாக இருந்­தது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் கடந்த ஆண்டு ஏப்­ர­லில் தொழில் துறை உற்­பத்தி வளர்ச்சி 3.2 சத­வீ­த­மாக இருந்­தது.

கடந்த ஏப்­ர­லில் தயா­ரிப்பு, சுரங்­கம் ஆகிய துறை­கள் சிறப்­பாக செயல்­பட்டதன் கார­ண­மாக தொழில் துறை உற்­பத்தி 4.9 சத­வீ­த­மாக வளர்ச்சி கண்­டுள்­ளது. தொழில் துறை உற்­பத்­தியை கணக்­கி­டு­வ­தில் தயா­ரிப்பு துறை­யின் பங்கு 77 சத­வீ­தத்­திற்­கும் அதி­க­மாக உள்­ளது.

ஏப்­ர­லில் தயா­ரிப்பு துறை, 5.2 சத­வீ­தம் வளர்ச்சி கண்­டுள்­ளது. கடந்த ஆண்டு, இதே மாதத்­தில் 2.9 சத­வீ­த­மாக இருந்­தது. இதே காலத்­தில் சுரங்­கத் துறை­யின் உற்­பத்தி 3 சத­வீ­தத்­தில் இருந்து 5.1
சத­வீ­த­மாக வளர்ச்சி கண்­டுள்­ளது.

அதே­ச­ம­யம், இதே காலத்­தில் மின் உற்­பத்தி, 5.4 சத­வீ­தத்­தில் இருந்து, 2.1 சத­வீ­த­மாக குறைந்துள்ளது. கடந்த, 2017, நவம்­ப­ரில், தொழில் துறை உற்­பத்தி, 25 மாதங்­களில் இல்­லாத    அள­வாக 8.4 சத­வீ­தம் என்ற அள­வில் அதி­க­ரித்து காணப்­பட்­டது.

மத்­திய புள்­ளி­யி­யல் அலு­வ­ல­கம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில் மேற்­கண்ட விப­ரங்­கள்
தெரி­விக்­கப்­பட்­டுள்­ளன.

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon