Primary Menu

Top Menu

September 25, 18

ஓ.. சேலையைதான் பார்க்கணுமா…? அதை நீ சொல்லவே இல்ல…!

ஜவுளிக் கடையில் கணவனும் மனைவியும்..

மனைவி : “இந்த கேட்லாக் பாத்தீங்களே.. இதுல எதாவது நல்லா இருக்கா..?”

கணவர் : “ஒண்ணு., ரெண்டு ஓ.கே..”

மனைவி : ” எங்கே குடுங்க பார்க்கலாம்…! ” மனைவி கேட்லாக்கை வாங்கி பார்த்தாங்க..

மனைவி : “ஏங்க… இந்த 17-ம் பக்கம் பாருங்க… இது நல்லா இல்ல…?”

கணவர்: “ம்ஹூம்… நல்லா இல்ல..!”

மனைவி : “இந்த 32-ம் பக்கம்… இது எப்படி..?”

கணவர் : “சுமார் தான்….!” கொஞ்ச நேரம் கழித்து

மனைவி : “இந்த 59-ம் பக்கம் பாருங்க..”

கணவர் : “ம்ஹூம்…. இதுவும் எனக்கு பிடிக்கலை.. மூக்கு சப்பையா இருக்கு..!”

மனைவி : “என்னாது மூக்கு சப்பையா இருக்கா..?” Wife முகத்துல ஒரு தீப்பொறி தெரிஞ்சது..

மனைவி: “அப்ப இவ்ளோ நேரம் நீங்க இதுல இருந்த பொண்ணுங்களதான் பாத்துட்டு இருந்தீங்க..?? சேலையை பார்க்கல…?! ”

கணவர் : “ஓ.. சேலையைதான் பார்க்கணுமா…? அதை நீ சொல்லவே இல்ல…!”

Comments

செல்போன்களின் சண்டை

SAMSUNG : நான் மட்டும் தான் எல்லாருடைய
கையிலும்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon