Primary Menu

Top Menu

August 15, 18

கணவரின் கள்ளக்காதலியின் மகளைக் கொன்ற மனைவி

கணவரின் தகாத உறவால், கள்ளக்காதலியின் மகளைக் கொன்ற மனைவியை, போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த, கருமாண்டிச்செல்லிபாளையம், அங்கப்பா வீதியை சேர்ந்தவர் சண்முகநாதன். இவரின் மகள் கனி நேற்று முன்தினம், வீட்டின் அருகே, உடலில் காயங்களுடன், மர்மமான முறையில் இறந்து கிடந்தார். உடலைக் கைப்பற்றி, பெருந்துறை போலீசார் விசாரித்தனர். உடற்கூறாய்வில், கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இதனால் சிறுமியின் அக்கம்பக்கத்தினர் வீடுகளில், போலீசார் விசாரித்தனர். அப்போது, ஒரு மூதாட்டி, சிறுமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் வனிதா என்ற பெண், சிறுமியை தோளில் தூக்கிச் சென்றதை பார்த்தாக கூறினார். வனிதாவிடம் விசாரித்ததில், சிறுமியை கொன்றதை ஒப்புக் கொண்டார்.

 கொலையாளி வனிதா

பெருந்துறை இன்ஸ்பெக்டர் சுகவனம் கூறியதாவது:

நீலகிரி மாவட்டம், குன்னூர், தூளூர்மட்டத்தை சேர்ந்தவர் வனிதா (33 வயது )  இவர், 2009ல், வேறு பிரிவை சேர்ந்த கமலக்கண்ணன் ( 35 வயது ) என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு எட்டு வயதில் ஒரு மகன் உள்ளான். ஏழு ஆண்டுகளுக்கு முன், கருமாண்டிச்செல்லிபாளையம் பகுதிக்கு குடிவந்தனர். பக்கத்து வீட்டில் வசிக்கும் சண்முகநாதன், கனகா தம்பதி உடன் நட்பாக பழகினர். சண்முகநாதன் குடிபோதைக்கு அடிமையாகி, குடும்பத்தை சரிவர கவனிக்காமல் இருந்தார். அப்போது, வனிதாவின் கணவர் கமலக்கண்ணன், கனகா இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கனகாவின் மகள் கனியைத் தன் மகள் போல் பாவித்து, கமலக்கண்ணன் செலவு செய்தார். இதனால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சிறுமி உயிருடன் இருந்தால் தனக்கும், தன் மகனுக்கும் பிரச்னை ஏற்படும் எனக் கருதிய வனிதா, கொலை செய்ய முடிவு செய்தார்.

 காதல் கல்யாணம்

நேற்று முன்தினம், வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கனியை, தின்பண்டம் தருவதாக, வீட்டுக்கு கூட்டிச் சென்று, வாயைப் பொத்தி, கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். உடலை தோளில் தூக்கிச் சென்று, மரத்தடியில் போட்டு வந்துள்ளார். உடற்கூறாய்வு அறிக்கை, நேரில் பார்த்த சாட்சி, வனிதாவின் ஒப்புதல் வாக்குமூலம் ஆகியவற்றின் அடிப்படையில், வனிதாவைக் கைது செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon