Primary Menu

Top Menu

September 26, 18

ஏழை நோயாளிகளுக்கு செல்ல வேண்டிய உறுப்புகள் மோசடி

உறுப்பு மாற்றுச் சிகிச்சையில் தமிழகம்தான் முதல் இடம் வகித்து வருகிறது. ஆனால் சமீப காலத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் மோசடி தலைதூக்கியுள்ளது. அதுவும் குறிப்பாக இதய மாற்று அறுவை சிகிச்சையில் வெளிநாட்டு நோயாளிகள் அதிகம் பயனடையும் வகையில் மோசடி நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் 2017-ம் ஆண்டில் நடைபெற்ற மொத்த இருதய மாற்று அறுவை சிகிச்சையில் 25 சதவீதம் பேர் வெளிநாட்டவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதே ஆண்டில் 33 சதவீத வெளி  நாட்டவர்களுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிசிக்சை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் சமீபத்தில் நடைபெற்ற 4 இதய மாற்று அறுவை சிகிச்சையில் 3 வெளிநாட்டவருக்கு இதயம் பொறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேசிய உறுப்பு மாற்று அமைப்பின் இயக்குனர் விமல் பண்டாரி கூறுகையில்,  இந்தியர்களின் இதயம்,  இந்தியர்களுக்கு பொருந்தாதது வருத்தம் அளிப்பதாகவும், காத்திருப்பு பட்டியலில் உள்ள இந்திய ஏழை நோயாளிகளுக்கு செல்ல வேண்டிய உறுப்புகள் முறைகேடாக வெளிநாட்டவர்களுக்கு பொறுத்தப்படுவது வருத்தமளிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் வெளிநாட்டவருக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்றும் இந்தியர்களின் பணமதிப்பு வெளிநாட்டவரின் பணமதிப்பை விடக் குறைவாக இருப்பதே இதற்குக் காரணமோ? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Comments

வங்கிகளின் வாராக்கடன் குறைவு – அருண்ஜெட்லி

மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon