Primary Menu

Top Menu

September 22, 18

பேய் இருக்கும் இடங்கள் !!

மார்கெட் இல்லாத நடிகரை வைத்து படம் எடுத்தாலும் கூட, பேய் படம் என்றால் லாபம் பார்த்துவிடலாம். என்னதான் பயமாக இருந்தாலும் பேய் படம் என்றால் விரும்பி பார்க்கும் எண்ணம் உலக சினிமா ரசிகர்களுக்கு உண்டு. இது போக, எது ஒன்றை நமது மனம் வேண்டாம் என்கிறதோ, ஒட்டுமொத்த உலகமும் வேண்டாம் என்கிறதோ… அதை தான் செய்ய நாம் முயல்வோம்.

அப்படியாக தான் பேய் மீதான இந்த ஆர்வமும். சுடுகாடு, பழைய மாளிகள், அரண்மனை, பாழடைந்த கட்டிடம், ஊருக்கு ஒதுக்குபுறமான வீடு என பேய்கள் இருக்கலாம் என்று நாம் கருதும் இடங்கள் எல்லாமே நீண்ட காலம் யாரும் இல்லாமல் இருக்கும் இடங்கள் தான்.

இதுவரை நீங்கள் பேய் வீடு, பேய் இருக்கும் டிவி, கண்ணாடி, மொபைல் எல்லாம் பார்த்திருப்பீர்கள். ஆனால், உலகின் மிகவும் பிரபலாமான நகரங்களாக கருதப்படும் இந்த நகரங்களும் கூட பேய்களுக்கு பெயர்போனவை தான்….

1. நியூ ஆர்லியன்ஸ், லூசியானா நியூ ஆர்லியன்ஸ் நகரில் தான் உலகின் பெரிய பேய் கல்லறை இருக்கிறது. தி செயின்ட் லூயிஸ் என பெயர் கொண்டிருக்கும் இந்த இடுகாட்டில் மற்றும் இதை சுற்றி இருக்கும் இடங்களில் பேய்கள் நடமாட்டம் இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள். உள்நாட்டு போரில் இறந்த வீரர்களை அந்த கல்லறை அருகே கண்டுள்ளதாகவும் பல தகவல்கள் அறியப்படுகிறது. இந்நகரில் பல பேய் வீடுகள் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. பேய் வீடுகளாக கருதப்படும் அனைத்து வீடுகளும் சாதாரண வீடுகளாக அல்லாமல், பெரும் மதிப்பு கொண்டவையாக இருக்கின்றன.

பல நாடுகளுக்கு அடிமைகளை அனுப்பும் அடிமை சந்தையாகவும் இது இருந்துள்ளது. இங்கே இருந்த ஒரு பிரெஞ்சு குவாட்டர்ஸ்ல் பல அடிமைகளை அடித்து கொடுமை செய்து வந்ததாகவும், அவர்களது ஆவிகள் இன்னும் அந்த குவாட்டர்ஸ்-ஐ சுற்றி வருகிறது என்றும் இவர்கள் நம்புகிறார்கள்.

2. எடின்பர்க், ஸ்காட்லாந்து இருள் சூழ்ந்த, மிகவும் குளுமையான இடங்கள் எல்லாம் பேய்கள் இருப்பிடம் போலவே படங்களில் காணப்படுகின்றன. நிஜத்திலும் அப்படி தான் போல. பிரபலமான எடின்பர்க் மாளிகையில் நிறைய ஆவிகள் இருப்பதாக நம்பப்படுகிறது. டிரம்ஸ் வாசிக்கும் தலை இல்லாத நபர், நடக்கும் சப்தத்துடன் கருவியை வாசித்துக் கொண்டே நடந்து வருவதை சிலர் பார்த்துள்ளதாக கூறுகிறார்கள். மேலும், அமெரிக்க புரட்சி போரில் பங்கெடுத்த வீரர்களின் ஆவிகளும் இந்த மாளிகையின் ஹால் மற்றும் படிகளில் உலவி வருகிறது என்று கூறுகிறார்கள்.

3. லண்டன், இங்கிலாந்து லண்டன், உலக சுற்றுலா மேற்கொள்ளும் பெரும்பாலான நபர்களுக்கு பிடித்தமான இடம். வரலாறு, பழமை, மாடர்ன் என அனைத்தும் கலந்த இடமாக இருக்கிறது லண்டன். ஆனால், உலகின் பேய் நகரங்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. முக்கியமாக பழைய ரயில் நிலையங்கள் மற்றும் கல்லறைகளில் பேய்கள் இருப்பதாக கருதுகிறார்கள். 2000ம் ஆண்டு லிவர்பூல் ஸ்டேஷன் அருகே நள்ளிரவு 2 மணியளவில் ஒரு சம்பவம் நடந்தது.

ஸ்டேஷன் மூடப்பட்ட பிறகு, யாரோ உள்ளே இருப்பது போன்ற காட்சி சிசிடிவியில் பதிவாகிக் கொண்டிருந்தது. உடனே காவலாளிகளில் ஒருவர் யார் என்று பார்க்க சென்றார். ஆனால், நேரில் பார்த்த போது அங்கே யாரும் இல்லை. அவர் தன்னிடம் இருந்து போன் மூலம், அப்படியாரும் இங்கே இல்லையே என்றார். அதற்கு அவர் கேட்ட பதில், அவன் உன் எதிரே தான் அமர்ந்திருக்கிறான். உன்னால் பார்க்க முடிய வில்லையா? என்பது தான். அன்றில் இருந்து இன்று வரை அங்கே பேய் நடமாட்டம் இருக்கிறது என்று நம்பி வருகிறார்கள்.


4. பாரிஸ், பிரான்ஸ் நிறைய தாழ்வார பகுதிகள் கொண்டிருக்கும் நகரம் பாரிஸ். இங்கே அண்டர்கிரவுண்ட் இடங்களில் புதைக்கும் வழக்கமும் இருக்கிறது. உலகிலேயே பெரிய அடித்தள கல்லறை இதுதானாம். இங்கே 60 இலட்சத்திற்கும் மேலானோர்களை புதைத்துள்ளனர்.

ஈபிள் டவர் ஒரு முக்கிய சுற்றுலா இடமாக இருக்கிறது. ஆனால், இதை ஒரு சூசைடு பாயின்ட் என்றும் கூறுகிறார்கள். இங்கே ஒரு இலம்பெண்ணின் ஆவி இருக்கிறது என்ற கட்டுக்கதை நிறைய கேள்விப்பட முடிகிறது.

5. ரோம், இத்தாலி பாரிஸ் போலவே ரோம் நகரிலும் நிறைய தாழ்வார பகுதிகள் இருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 10 – 11 இரவில் அழகான செயின்ட் ஏஞ்சலோ பாலத்தின் மீது கையில் தனது தலையை ஏந்தி ஒரு பெண் பேய் நடந்து செல்லும் எனும் கதை இங்கே பலர் கூறுகிறார்கள். அது பீட்ரைஸ் சென்ஸி (Beatrice Cenci) எனும் பெண்ணின் ஆவி என்கிறார்கள்.

6. சவன்னா, ஜார்ஜியா சவன்னா வரலாறு முழுக்க, முழுக்க இரத்தமும், நெருப்பும் சூலந்திருக்கிறது. இங்கே பல இரக்கமற்ற கொலைகள், மரணங்கள் நடந்துள்ளன. உண்மையில் இது ஒரு பெரிய சுடுகாடு என்கிறார்கள். இங்கே இருந்த லூகாஸ் எனும் திரையரங்கில் ‘The Exorcist’ எனும் படத்தை வெளியிட்ட பிறகு, இங்கே வினோதமான சப்தங்கள் கேட்பதாக அங்கே பணிபுரியும் ஆட்கள் கூறினர்.

 

 

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon