Primary Menu

Top Menu

September 23, 18

தலையை துண்டித்த பின்னும் உயிருடன் இருந்த அதிசய கோழி!

சம்பவம் சுமார் 73 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்திருக்கிறது. 1945 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 தேதி க்ளோடரோ மாகாணத்தில் பண்ணை வைத்திருக்கும் லாய்ட் ஓல்சன் மற்றும் அவரது மனைவி க்ளாரா ஆகியோர் இணைந்து தங்கள் ஃப்ரூய்டா பண்ணையில் வளர்க்கப்பட்ட கோழிகளை அறுத்துக் கொண்டிருந்தார்கள். ஓல்சன் தலையை துண்டித்து அறுத்துப் போட, மனைவி க்ளாரா அதனை சுத்தம் செய்வது வாடிக்கை.

#1

அப்படி அன்றும் வழக்கம் போல தலையை அறுத்துப் போட வழக்கமாக எல்லா கோழிகளும் இறந்துவிடும் ஆனால் இந்தக் கோழில் மட்டும் துடித்துக் கொண்டேயிருந்திருக்கிறது. சரி, சில நிமிடங்களில் அடங்கிவிடும் என்று நினைத்திருந்திருக்கிறார்கள். நிமிடங்கள் கடந்து மணி நேரங்கள் ஆனது. இவர்களுக்கு எல்லாம் ஒரே ஆச்சரியம்.

 #2

அதன் பிறகு தான் கூத்து, தலை துண்டிக்கப்பட்ட கோழி எழுந்து நிற்கது துவங்கியிருக்கிறது, ஓடத் துவங்கியிருக்கிறது, எல்லாரும் பயந்தே விட்டார்களாம். ஏதேனும் கெட்ட ஆவியாக இருக்கும் என்று நினைத்து ஓர் இருட்டறையில் அதாவது சிறிய பெட்டியொன்றில் அடைத்து வைத்திருக்கிறார்கள்.
#5
தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோழி நடப்பது எல்லாம் இயல்பு வாழ்க்கையில் நடக்கிற காரியமா? மேற்கொண்டு வெட்டவும் அவர்களுக்கு பயம், அப்படி வெட்டப்போய் கோழியை பிடித்துக் கொண்டிருக்கும் கெட்ட ஆவி நம்மை பிடித்துக் கொண்டால் என்ன செய்வது என்று பயந்தார்கள். இதனால், நாள் முழுவதும் அடைத்து வைத்துவிட்டு, மறுநாள் இந்த கோழி இறந்திருக்கும் என்று நினைத்து பார்த்தால்…. கொடுமை கோழி அசைந்து கொண்டிருந்ததாம்.

 #6

சரி,இந்த கோழியை எங்காவது விற்று விடலாம் என்று சொல்லி, கோழியை எடுத்துக் கொண்டு மார்க்கெட்டுக்கு போயிருக்கிறார்கள். அங்கே தங்களிடம் அதிசயமான பறவையொன்று இருக்கிறது என்று விளம்பரபடுத்தியிருக்கிறார்கள். கூட்டம் கூடியது, அதோடு தலையில்லாத கோழியைப் பற்றிய தகவல் எங்கெங்கும் பரவியது.

#4

உள்ளூர் பத்திரிக்கை ஒன்று ஓல்ஸ்டரை பேட்டி கண்டு செய்தி வெளியிட்டது, செய்தி இன்னும் அதிகமாகவும்,வேகமாகவும் பரவியது. அப்போது பெருநகரத்திலிருந்து இந்த கோழியை ஆய்வு செய்ய கொடுத்தால் அதற்கு தக்க சன்மானம் கொடுக்கிறோம் என்றார்கள்.

ஓல்ஸ்டர் வசிப்பது கிராமப்பகுதி, அங்கிருந்து ஆய்விற்கு கொண்டு செல்ல வேண்டிய தூரம் முன்னூறு கிலோ மீட்டருக்கும் அதிகம், எப்படி கொண்டு செல்ல, ஒரு வேலை வழியிலேயே இந்த கோழி இறந்துவிட்டால் பயணத்திற்கு செலவழித்த பணம் எல்லாம் வீணாகிடுமே…. இதுவும் ஆரோக்கியமான கோழியல்ல தலை துண்டிக்கப்பட்டு கிடக்கிறது, அதனால் அதற்கும் வழியில்லாமல் தவித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

#8

அதன் பிறகு பண்ணையிலிருந்து கிடைக்கும் வருமானம் கொஞ்சம் சுமாராக வேறு வழியில்லை, இந்த கோழியை ஆய்வு செய்ய கொண்டு சென்று கொடுக்கலாம் என்று முடிவெடுக்கிறார்கள். இந்த நிலையின் கோழியின் தலையை துண்டித்து கிட்டத்தட்ட நான்கு மாத காலங்கள் ஓடிவிட்டிருந்தது . இத்தனை காலமாக உயிருடன் இருக்கிறதே என்று ஓல்ஸ்டர் மற்றும் அவரது மனைவிக்கும் தைரியம்.
உடாஹா பல்கலைக்கழகத்திற்கு கொண்டு சென்று அங்கு அந்த அதிசய கோழிக்கு பல்வேறு டெஸ்ட்டுகள் எடுக்கப்படுகிறது, அதே நேரத்தில் வேறு சில கோழிகளின் தலையை அறுத்துப் பார்க்கிறார்கள். பல்வேறு கோணங்களில் அறுத்தும் பார்க்கிறார்கள். தலை துண்டாகி கீழே விழுந்த நொடியில் கோழியின் உயிர் பிரிந்து விடுகிறது. அது எந்த கோணத்தில் அறுத்தாலும் இது தான் நிலைமை…. ஆனால் இந்த கோழி மட்டும் ஏன் உயிர் துறக்காமல் இருக்கிறது என்ற மர்மம் மட்டும் யாருக்கும் தெரியவேயில்லை.

#9

மைக் என பெயிடப்பட்ட அந்த தலையில்லாத கோழியை நம்பிக்கையின் வடிவம் என்று வர்ணித்தார்கள். நகரத்திற்கு வந்து விட்டார்கள், ஆய்வு எல்லாம் நடத்தப்படுகிறது அல்லவா செய்திகள் இன்னும் பலருக்கும் பரவியது. அமெரிக்காவிற்கு மைக்குடன் சுற்றுலா செல்லும் அளவிற்கு மைக் புகழ் பரவி விட்டிருந்தது.

கலிஃபோர்னியா, அரிஜோனா என பல நகரங்களுக்கும் பயணிக்கிறார்கள். பறவையின் பயணம் பற்றியும், அதன் செய்கைகள் மற்றும் நடவடிக்கைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து எல்லாம் மிகவும் கவனமாக கவனித்து பதிவு செய்யப்படுகிறது.
#13
இந்த கோழிக்கு பல கடிதங்களும் வருகிறது, வந்தது எதுவுமே பாசிட்டிவான விஷயங்களை சொல்லவில்லை, மாறாக நாசி படையினருடன் ஒப்பிட்டிருந்தார்கள். மைக்கை கொன்று போடுங்கள் அது நம்மை அழிக்க வந்திருக்கும் தீய சக்தி என்றார்கள்.

முதல் கட்ட சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு மைக்குடன் அரிசோனா மாகாணத்தில் இருக்கும் போனிக்ஸ் என்னுடமிடத்திற்கு கொண்டு செல்கிறார்கள் . அங்கே எதிர்பாராத விதமான மைக் உயிர் பிரிகிறது. கிட்டத்தட்ட 18 மாதங்கள். பிறந்து அல்ல, தலை துண்டிக்கப்பட்டு பதினெட்டு மாதங்கள் வரை மைக் உயிருடன் இருந்திருக்கிறது.

ஓல்சன் கோழியின் தொண்டைப்பகுதியில் நேரடியாக திரவ உணவினை நேரத்திற்கு ஊற்றுவதை வழக்கமாக கொண்டிருந்தார். உணவினை கொடுக்க, பின்னர் தொண்டைப் பகுதியை சுத்தம் செய்ய சிரிஞ்ச் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

#15
வாயிருந்தால் எச்சிலைக் கொண்டு தொண்டையை சுத்தம் செய்திருக்கும், வாயும் இல்லையே…. ஆக உணவு கொடுப்பது, சுத்தம் செய்வது எல்லாமே ஓல்சன் தான்.

அன்றைக்கு மைக் இறந்த போது, பறவை எங்கேனும் சிக்கிக் கொண்டால் இறக்கைகளை வேகமாக அடித்துக் கொள்ளுமே அப்படியொரு சத்தம் கேட்டிருக்கிறது, இவர்கள் திடுக்கிட்டு எழுந்து பார்த்தால் அலறிக் கொண்டிருப்பது மைக், தொண்டையில் ஏதோ அடைத்திருக்கும் போல, சுத்தம் செய்யலாம் சிரிஞ்ச் எங்கே என்று தேடும் போது தான், பீனிக்ஸ் நகரத்திற்கு வரும் போதே சிரிஞ்சை கொண்டு வரவில்லை எங்கோ தொலைத்துவிட்டிருக்கிறோம் என்று தெரிகிறது. சிறிது நேரத்தில் மைக் மூச்சுத் திணறி இறந்து விடுகிறது.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon