Primary Menu

Top Menu

July 21, 18

ஹரியானாவில் 9 வயது சிறுமியின் உடல் அடைக்கப்பட்டவாறு ஒரு பை கண்டெடுப்பு

சண்டிகர் : ஹரியானா மாநிலம் ரோஹ்தாக் பகுதியில் உள்ள Titauli கிராம வாய்க்காலில் பை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த பைக்குள் 9 வயது சிறுமியின் உடல் அடைக்கப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வட மாநிலங்களில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இது போன்ற சம்பவங்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், இன்றும் ஒரு சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலம் திடௌலி என்ற கிராமத்தில் உள்ள ஒரு வாய்க்காலில் மிதந்தபடி ஒரு பை கிடந்துள்ளது. அதில் யாரோ ஒருவரின் கை,கால் இருப்பதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் அந்தப் பையை எடுத்து சோதனை நடத்தினர். அதில் 9 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியின் உடல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின் உடனடியாக உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply