Primary Menu

Top Menu

September 24, 18

சமூக ஊடகங்களின் வழியாக அச்சுறுத்தும் மோமோ சவால் – மத்திய அரசு அறிவுரை

சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் மோமோ விளையாட்டு குறித்து அரசு அறிவுரைகளை வழங்கியுள்ளது.

 

ப்ளூவேல் விளையாட்டைப் போன்று, தற்போது சமூக வலைத்தளங்களில் அச்சுறுத்தும் விளையாட்டாக மோமோ சவால் இருக்கிறது.

 

இது சிறுவர்கள், இளவயதினருக்கு பல்வேறு சவால்கள் விடுத்து, இறுதியில் தற்கொலைக்கு தூண்டி விடுகிறது.

 

இந்த விளையாட்டில் மோமோ என்ற பெயரில் முன்பின் தெரியாத தொலைபேசி எண்களை, உங்கள் வாட்ஸ்-அப்பில் பதிவு செய்து கொள்ள வலியுறுத்தும்.

 

அவ்வாறு செய்துவிட்டால், அந்த எண்ணின் புகைப்படம் மோமோ என்ற ஜப்பானிய பொம்மையின் முகம் தென்படும். இதன்பிறகு படிப்படியாக விளையாடுபவரை தன்வசம் ஈர்த்துக் கொள்ளும்.

 

விளையாட்டு விதிமுறைகளை பின்பற்றாவிட்டால், ஆபத்தான படங்கள், ஆடியோக்கள், வீடியோக்கள் ஆகியவற்றைக் கொண்டு நம்மை அச்சுறுத்தத் தொடங்கும். இதனால் நாட்டின் சில பகுதிகளில் தற்கொலை சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

 

இதுதொடர்பாக விழித்துக் கொண்ட மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் பெற்றோர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

 

அதாவது, ஆன்லைனில் புதிய சவால் விளையாட்டாக மோமோ சவால் விளங்குகிறது. பேஸ்புக்கில் தொடங்கப்பட்டு, அதில் உறுப்பினர்களாக இருப்பவர்களிடம், முன்பின் தெரியாத எண்களுடன் தொடர்பு கொள்ள சவால் விடப்படுகிறது.

 

இது வாட்ஸ்-அப் போன்ற சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Comments

புதுச்சேரியில் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் அறிமுகம்

புதியதாக அறிமுகப்படுத்துள்ள ஆயுஷ்மான்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon