Primary Menu

Top Menu

September 22, 18

விடுதலை குறித்த அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரிப்பார் – சுப்பிரமணியசாமி

எழுவர் விடுதலைக் குறித்த தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரிப்பார் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

 

பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவுசெய்து கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, இன்று தமிழக அமைச்சரவை கூட்டப்பட்டது.

 

அதில் ராஜீவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரையும் விடுவிக்க முடிவெடுத்து அதை தமிழக ஆளுநருக்குப் பரிந்துரை செய்து தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

 

தமிழக அரசின் இந்த முடிவைக் குறித்து கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, “இது வெறும் பரிந்துரை மட்டுமே. இது குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது. இது தொடர்பான ஆவணங்களை அவர் படிப்பார்.

 

அறிவுகூர்மையுள்ள அவர் இந்தப் பரிந்துரையை நிராகரிப்பார்’’ என்று சுப்பிரமணியன் சுவாமி ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

 

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon