Primary Menu

Top Menu

April 24, 18

கூகுள் ஹோம் ஸ்பீக்கர் இந்தியாவில் இன்று அறிமுகம் !!

கூகுள் ஹோம், ஹோம் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கூகுள் அசிஸ்டண்ட் உதவியுடன் செயல்படும் இந்த கூகுள் ஹோம் ஸ்பீக்கர்களில் ‘ஹாய் கூகுள்’ அல்லது ‘ஓகே கூகுள்’ என்று  சொல்லிவட்டு என்ன தேவையோ அதை கூகுளிடம் கேட்கலாம். இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் மூலம் வீடுகளை கட்டுப்படுத்த முடியும்.  பாடல்கள், வீடியோக்கள் ஒளிபரப்ப மற்றும் விடைகளை தேட என பல்வேறு வசதிகளை பெற முடியும்.

நீங்கள் கூகுளிடம் ‘ஹாய் கூகுள்’ ஒரு ஜோக் சொல்லு என்று கேட்டால் உடனே சிரிக்க வைப்பதற்கான ஜோக்குகளை சொல்லும். இதுமட்டுமின்றி நீங்கள் கூகுளிடம் பொது அறிவு சம்பந்தமான கேள்விகளை கேட்டும் பதில் பெறலாம்.

கூகுள் ஹோம் ரூ.9,999 க்கும் கூகுள் ஹோம் மின் ரூ.4,499 க்கும் பிளிப்கார்ட் மூலம் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

Vaishali

Author of In4 Network from past 3 years, News and Articles with Genre of Cinema, Political, Sports, Business and General in the level of content is Tamilnadu, India and also Globally.

Leave a Reply