Primary Menu

Top Menu

May 28, 18

பெண் குழந்தை பிறந்தா கொண்டாடும் கிராமம்

பெண்களுக்கான பிரச்னைகள். வரதட்சனை, ஒடுக்குமுறைகள், வரதட்சணை கொடுமை, கௌரவக் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் இப்படி நிறைய குவிந்திருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் ஒரு ஊரில் மட்டும் பெண் குழந்தை பிறந்தால்அதை மாபெரும் கொண்டாட்டமாக நினைக்கிறார்கள்.

முன்னேற்றம்

பெண் குழந்தை பிறந்தாலே கள்ளிப்பால் ஊற்றிக் கொன்றது ஒரு காலம். அதன்பின் பெண் பிள்ளையின் அருமைகளை உணர்ந்த பெற்றோர்கள் தங்கள் வீட்டில் முதன் குழந்தை பெண்ணாக பிறந்தாலே தன் வீட்டுக்குள் லட்சுமி வந்துவிட்டதாக நினைத்தார்கள்.

அதன் அடுத்த கட்டமாக பெண்களை ஆண்களுக்கு நிகராக கல்வி கற்க அனுப்பினோம். இப்போது கிட்டதட்ட ஆட்டோ ஓட்டுவதில் இருந்து விண்வெளிக்குச் செல்வது வரையிலும்அவர்கள் தொடாத துறைகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

பெண் பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பதில்  சிரமங்கள் இருந்தாலும் பெண் குழந்தை பிறந்துவிட்டால் அதை பெரும் விழா போல கொண்டாடும் ஊரும் மக்களும் இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள பிப்லந்திரி என்னும் கிராமம் தான் அது.

அப்படி என்ன விழா கொண்டாடுகிறார்கள் என்று தானே கேட்கிறீர்கள். அந்த கிராமத்தில் ஒவ்வொரு பெண் பிள்ளை பிறக்கும்போதும் ஊர்மக்களும் பஞ்சாயத்தும் ஒன்றுகூடி 111 மாமரங்களை நடுகின்றனர். அந்த மரங்கள் அந்த பெண் பிள்ளைகளின் பெயரில் எழுதி வைக்கப்படுகிறது. அந்த குழந்தை வளர வளர மரங்களும் பஞ்சாயத்து மற்றும் அந்த குழந்தையின் பெற்றோர்களால் வளர்க்கப்படுகின்றன.

Image result for girl children mango tree

பெண் பிள்ளை பிறந்தவுடன் அந்த கிராமத்தில் உள்ள ஓரளவுக்கு வசதி படைத்தவர்கள், பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியார்கள் ஆகியவர்களிடம் இருந்து 21,000 ரூபாய் பணம் சேகரித்து, அதோடு பெண் குழந்தை பெற்றோர்களிடம் இருந்து 10,000 வாங்கி, மொத்தம் 31,000 ரூபாயையும் அந்த குழந்தையின் பெயரில் டெபாசிட் செய்யப்படுகிறது.

அந்த ஊரில் சராசரியாக ஒரு ஆண்டுக்கு 60 பெண் குழந்தைகள் பிறப்பதாக அந்த ஊர் பஞ்சாயத்து தெரிவித்திருக்கிறது. ஒரு காலத்தில் அந்த ஊரில் வரதட்சணை கேட்கும் பழக்கம் அதிகமாக இருந்ததால், வரதட்சணையால் பெண் பிள்ளைகளோ அவர்களைப் பெற்றவர்களுா இறந்துவிடக் கூடாது என்பதற்காக அந்த ஊர் கூடி பஞ்சாயத்தில் எடுத்த முடிவு தானாம் இது. இதை தொடர்ந்து காலங்காலமாகி, அந்த ஊர் பஞ்சாயத்தும் மக்களும் செயல்படுத்தி வருகிறார்கள். ஊர் முழுக்க மரங்களால் சூழப்பட்ட பின்னும் அந்த ஊர் மக்கள் அந்தப் பழக்கத்தை நிறுத்தவில்லை.

மரங்கள் உயர வளரும். மீதமுள்ள தரைப்பகுதியையும் விட்டு வைக்காமல் அந்த இடங்களில் சமீப காலமாக பல ஆயிரக்கணக்கான கற்றாழை செடிகளை நட்டு வருகின்றனராம். கிட்டதட்ட 8000 பேர் வாழும் அந்த ஊரில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கிட்டதட்ட 2.5 மில்லியன் கற்றாழை செடிகளை நட்டு வைத்திருக்கிறார்கள். அந்த ஊரில் உள்ள பெண்களுக்கு தொழிற்பயிற்சி கொடுக்கப்பட்டு, கற்றாழையிலிருந்து ஜூஸ், ஜெல், ஷாம்பு, ஊறுகாய் ஆகியவை தயாரித்து வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார்கள்.

தொழிற்பயிற்சி

இது மட்டுமில்லைங்க. அந்த ஊர்ல பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. விலங்குகளை வெற்புறுத்தக்கூடாது. மரங்களை வெட்டக்கூடாது என ஏகப்பட்ட கட்டுப்பாடுகளுடன் அந்த மக்கள் வாழ்கின்றனர். கடந்த 7-8 வருடங்களாக, ஒரு போலிஸாரால் அந்த ஊரில் வழக்குப்பதிவு கூட இல்லையென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

Vaishali

Author of In4 Network from past 3 years, News and Articles with Genre of Cinema, Political, Sports, Business and General in the level of content is Tamilnadu, India and also Globally.

உங்களால் டூரிஸ்ட்களிடம் பிச்சை எடுக்கும் குரங்குகள் !!

சமீபத்தில் மலையடிவாரத்தில் இருக்கும்...

Leave a Reply