Primary Menu

Top Menu

August 15, 18

உணவு பாதுகாப்பு துறைக்கு வாட்ஸ் அப்பில் குவிந்த புகார்கள்

தரமற்ற மற்றும் சுகாதாரத்திற்கு கேடுவிளைவிக்கும் உணவுகளை பற்றிய புகார்களை தெரிவிக்க, 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணை உணவு பாதுகாப்புத் துறை அறிவித்தது. கடந்த ஓராண்டில் மட்டும் இந்த எண்ணிற்கு 2 ஆயிரத்து 464 புகார்கள் வந்துள்ளன. மேலும் அதற்கு முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

நெடுஞ்சாலையோரக் கடைகளில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக ஏராளமான புகார்கள் குவிந்துள்ளன. இதையடுத்து, உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். தரமற்ற பிளாஸ்டிக் கப்புகள், தட்டுக்களில் உணவு பரிமாறப்பட்டதாக எழும் புகார்களின் மீதும் அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

உணவு சார்ந்த தொழில் செய்வோர் அனைவரும் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்ய வேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை 77.4 சதவீத உணவு விற்பனையாளர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளதாகஉணவுப் பாதுகாப்புத்துறையினர் கூறுகின்றனர்.

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon