Primary Menu

Top Menu

October 16, 18

மாதம் பல லட்சங்களை சம்பாதிக்க ‘ரூசியான’ ஐடியா..!

இளைஞர்கள் மன அழுத்தத்தைக் குறைக்கப் பின்பற்றும் ஆரோக்கியமான வழிகளில் ஒன்று உணவு. உதாரணமாகக் கடுப்பாகும் போது ஒரு பிரியாணி, சந்தோஷமாக இருக்கும்போது ஒரு பிரியாணி, போர் அடிச்சா ஒரு பிரியாணி, வீக்கென்ட் ஆன பிரியாணி. இப்படிப் பலர் பல விதமாக உள்ளனர். இப்படி உணவு பிரியராக இருக்கும் மக்களின் எண்ணிக்கை இன்று ஏராளம். மன அழுத்தம் அதிகம் தரும் வேலையில் இருந்துகொண்டோ அல்லது முழுமையாக வேலையை விட்டுவிட்டு உங்களுக்குப் பிடித்தமான உணவு துறையில் தொழில் துவங்க சூப்பரான ஐடியா உள்ளது.

ஹோட்டல்:

உணவு தொழில் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ஹோட்டல் தொழில் தான். இதற்குத் தீவிர முதலீடும், குறிப்பிட்ட அளவு திட்டமிடலும் அவசியம். அதோடு ஒட்டலுக்குச் சமையல் மாஸ்டரின் கைபக்குவம் மு க்கியமானது. அதனால் சிறந்த சமையல் மாஸ்டரை தேர்வு செய்ய வேண்டும். ஓட்டல் தொழிலில் வெற்றி பெற சற்றுக் காலத் தாமதம் ஆகும். இதற்குப் பொறுமை முக்கியம்.

பேக்கரி:

இரண்டாவதாகப் பேக்கரி தொழிலை தேர்வு செய்யலாம். இதைத் தொடங்க முடிவு செய்துவிட்டால் உங்களது முதல் கவனம் பிரட், பிஸ்கட் வகைகளைச் சிறந்த செய்முறையுடன் தயாரிப்பதில் இருக்க வேண்டும். பே க்கரியை நீங்கள் சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ தொடங்கலாம்.

கேட்டரிங் சர்விசஸ்:

உங்களிடம் சிறந்த திட்டமும், மக்களைக் கையாளும் திறனும் இருந்தால் சொந்தமாகக் கேட்டரிங் தொழிலை தொடங்கலாம். ஆரம்பத்தில் சிரமமாகத் தான் இருக்கும். படிப்படியாக நீங்கள் இதைச் சமாளித்து முன்னேறிவிடுவீர்கள்.

சாக்லட் தயாரித்தல்ல்:

நீங்கள் சாக்லேட் பிரியராக இருந்தால் இந்த ஆலோசனை உங்களுக்குச் சரியானதாக இருக்கும். குறைந்த செலவில் சாக்லேட் தயாரிக்கும் தொழிலை தொடங்கிவிடலாம். வீட்டில் இருந்தே இந்தத் தொழிலை செய்யலாம் என்பது இதன் சிறப்பம்சம்.

உணவு வாகனம்:

வாகன உணவு தொழில் என்பது தற்போது வேகமாக வளர்ந்து வரக் கூடிய தொழிலாகும். குறைந்த முதலீட்டில் இந்தத் தொழிலை தொடங்கலாம். பொருத்தமான வாகனம் மற்றும் கச்சா பொருட்கள் இருந்தாலே இந்தத் தொழிலை தொடங்கிவிடலாம்.

ஐஸ்கிரீம் கடை:

அடுத்த உணவு தொழில் ஆலோசனையாக வருவது ஐஸ்கிரீம் கடை தான். இது எப்போதும் செழிப்பமாக இருக்கக் கூடிய தொழில். குறைந்த முதலீட்டில் இதைத் தொடங்கலாம். பிரபலமான ஐஸ்கிரீம் நிறுவனத்தின் ஏஜென்சி பெற்று தொடங்குவது சிறந்த முடிவாக இருக்கும்.

ஃபாஸ்ட் புட் கடை:

நவீன காலத்தில் ஃபாஸ்ட் புட் கடை என்பது சிறந்த உணவு தொழிலுக்கான ஆலோசனையாகும். இளைஞர்கள் காலை உணவு அல்லது இரவு உணவுக்கு ஃபாஸ்ட் புட் கடைகளைத் தேர்வு செய்யும் வழக்கம் உள்ளது. இங்கும் நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தின் முகமை எடுத்து நடத்தலாம்.

பெண்களுக்கு ஏற்ற தொழில்கள்?

பெண்கள் சுய தொழில் தொடங்கும்போது நமது...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon