Primary Menu

Top Menu

October 15, 18

வெள்ளத்தை தடுக்க கடல் மாதாவுக்கு 140 குழந்தைகள் நரபலி !

தென் அமெரிக்க நாடான பெருவில், கடந்த ஏப்ரல் மாதம் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் 140 குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டதையும், அவர்களது உடல்கள் புதைக்கப்பட்டு இருந்ததையும் கண்டுபிடித்தனர்.

பெரு, வட பகுதியில் அமைந்து உள்ள கடலோரப் பகுதியில் இந்த குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. நரபலி கொடுக்கப்பட்ட குழந்தைகள், 5-14 வயதுக்கு இடைப்பட்டவர்கள். இவர்கள் 550 ஆண்டுகளுக்கு முன்பு நரபலி கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

முற்கால சிமு பேரரசு காலத்தில் இந்த சம்பவம் நடந்து இருக்க வேண்டும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. அக்காலத்தில் வெள்ளபெருக்கு ஒன்று ஏற்பட இருந்ததாகவும் இதனால் அந்த ஊரே அழியும் நிலை ஏற்பட்டதனால் வெள்ளப்பெருக்கை தடுக்க கடவுள் நம்பிக்கை என்ற பெயரில், குழந்தைகள் பலி கொடுக்கப்பட்டு கடல் இருக்கும் திசை அருகில் மண்ணில் புதைப்பட்டுள்ளனர். அதோடு 200 ஓட்டக இன மிருகங்களும் புதைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொல்லப்பட்ட குழந்தைகளின் வயது 6-ல் இருந்து 14 வரை இருக்கும் என தெரியவந்துள்ளது. ஒரே நேரத்தில் இத்தனை பேர் நரபலி கொடுக்கப்பட்டு இருப்பது வரலாற்றில் இதுவே முதல் முறையாக இருக்கும் என கூறப்படுகிறது.

அப்துல் காலம் பிறந்தநாள் மோடி,மம்தா ட்விட்டரில் கருத்து?

அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon