Primary Menu

Top Menu

September 22, 18

இந்தியா -பாகிஸ்தான் இடையேயான உறவு மேம்படும்-பரூக் அப்துல்லா 

 தனது தந்தையும் தேசிய மாநாட்டு கட்சி நிறுவனருமான ஷேக் முகம்மது அப்துல்லாவின் 36-வது நினைவு தினத்தில் கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய பரூக் அப்துல்லா  கூறியதாவது. பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான்கான் தலைமையின் கீழ், இந்தியா- பாகிஸ்தான் இடையேயான நட்புறவு மேம்படும் என்று நம்பிக்கை இருப்பதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக்கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
பரூக் அப்துல்லா மேலும் கூறும் போது, “ பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்றுள்ள நிலையில், இந்தியா -பாகிஸ்தான் இடையேயான உறவு மேம்படும் என்று நம்பிக்கையோடு உள்ளோம். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவு மேம்படுவது நமக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில், இருநாடுகளுக்கு இடையேயும் இணக்கான சூழல் இருந்தால்தான், நமது (காஷ்மீர்) பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பாதையை பின்பற்றி பிரதமர் மோடியும் அண்டை நாடுடான நட்புறவை மேம்படுத்துவார் என நம்புகிறேன்.
Comments

இணையத்தில் வைரலாகும் வர்மா பர்ஸ்ட் லுக் போஸ்டர்

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon