Primary Menu

Top Menu

September 26, 18

ஃபேஸ்புக்கில் செலவிடப்படும் நேரம் அதிக மதிப்புடையதாக இருக்கும் – மார்க் சக்கர்பெர்க்

சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் தமது ‘நியூஸ் ஃபீட்’ செயல்படும் விதத்தில் பெரும் மாற்றங்களை கொண்டுவர திட்டுமிட்டு வருகிறது.

இதன் மூலம் வர்த்தக நிறுவனங்கள், பிராண்டுகள் மற்றும் ஊடகங்களின் பதிவுகள் மிகவும் குறைவான முக்கியத்துவம் பெறும் என்று தெரிய வருகிறது.

இதற்கு மாறாக, ஃபேஸ்புக் வலைதளத்தை பயன்படுத்தும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பகளுக்கு இடையில் உரையாடல்களை உருவாக்கும் பதிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி மார்க் சக்கர்பெர்க் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

இதன் விளைவாக, ஃபேஸ்புக் வலைதளத்தை பயன்படுத்தும் நிறுவனங்கள் தங்களுடைய பதிவுகளின் முக்கியத்துவம் குறைவதை காணலாம் என்று இந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

அடுத்து வருகின்ற வாரங்களில், இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வர உள்ளன.

வர்த்தக நிறுவனங்கள், பிராண்ட்கள் மற்றும் ஊடகங்களின் பதிவுகள் குவிந்து ஒவ்வொருவரையும் இணைப்பதற்கு வழி செய்யும் தருணங்களை ஆக்கிரமிப்பதாக ஆய்வுகள் தெரிவிப்பதாக மார்க் சக்கர்பெர்க் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் நலவாழ்வை வளர்ப்பதற்கு ஃபேஸ்புக் மிகவும் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்புணர்வை அவரும், அவருடைய குழுவினரும் உணர்ந்துள்ளதாக சக்கர்பெர்க் தெரிவித்திருக்கிறார்.

 

“இத்தகைய மாற்றங்களை உருவாக்குவதன் மூலம், மக்கள், பேஸ்புக் பக்கத்தில் செலவிடும் நேரம் மற்றும் இந்த வலைதளத்தில் ஈடுபடும் அளவும் குறையும்” என்று சக்கர்பெர்க் மேலும் கூறியுள்ளார்.

“ஆனால். ஃபேஸ்புக் பக்கத்தில் செலவிடப்படும் நேரம் அதிக மதிப்புடையதாக இருக்குமெனவும் நான் எதிர்பார்க்கிறேன்” என்றார் சக்கர்பெர்க்.

2018ம் ஆண்டு ஃபேஸ்புக் வலைதளத்தை சீரமைக்கப் போவதாக முந்தைய பதிவு ஒன்றில் சாக்கர்பெர்க் தெரிவித்திருந்தார்.

Comments

யூடியூப் கேமிங் ஆப் திடீர் நிறுத்தம் – கூகுள்

யூடியூப் வீடியோ பிளாட்பார்மில்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon