Primary Menu

Top Menu

June 23, 18

பேஸ்புக் லைவில் காலா படத்தை வெளியிட்ட நபர் கைது

காலா திரைப்படம் வெளிநாடுகளில் நேற்று வெளியானது. சிங்கப்பூரில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்த்த வாலிபர், தியேட்டரில் இருந்தபடியே தனது பேஸ்புக் பக்கத்தில் படத்தை நேரடியாக ஒளிபரப்பினார். உலகம் முழுவதும் ஏராளமானோர் இதை பார்த்தனர். 45 நிமிடங்களுக்கு மேல் பேஸ்புக்கில் படம் ஓடியது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்சங்கத்தின் திருட்டு விசிடி தடுப்பு பிரிவு அளித்த புகாரின் பேரில், சிங்கப்பூரில் அவர் கைது செய்யப்பட்டார்.

காலா படத்தை தமிழகம் முழுவதும் லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், காலா திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள திரையங்குகளில் இன்று அதிகாலை வெளியானது. திரையரங்குகளுக்கு முன்பிருந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும், நடனமாடியும் கொண்டாடினர்.
சென்னை நகர் உள்பட தமிழகம்  முழுவதிலும் காலை 7 மணிக்கு முதல் காட்சி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர்ஸ்டார் ரஜினியின் படங்கள் குறித்து சிறப்பு கருத்துக்கணிப்பு

எவெர்க்ரீன் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘காலா’ படம் பல எதிர்ப்புகளை தாண்டி நாளை உலகம் முழுவதும் வெளியானது . ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு அடுத்து முதன்முதலாக வெளியாகும் அவருடைய படம் இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பினை உண்டுபண்ணியுள்ளது. இதனையடுத்து, ரஜினியின் படங்களில் சத்தமே இல்லாமல் பெரும் வெற்றியினை பெற்றுள்ளது. அதில் சில படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

பொல்லாதவன்

படிக்காதவன்

தர்மத்தின் தலைவன்

தர்மதுரை

 

இசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த...

Leave a Reply