Primary Menu

Top Menu

September 25, 18

ஆடியோ பதிவு வசதியை காப்பி அடித்த ஃபேஸ்புக்!!

சிங்கப்பூரை சேர்ந்த ‘வோக்ஸ்வெப்’ என்ற நிறுவனம் சேட்டிங்கின் போது ஆடியோ பதிவிடும் தனது வசதியை ஃபேஸ்புக் காப்பி அடித்துவிட்டதாக பரபரப்பு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்தியாவில் ஃபேஸ்புக் நிறுவனம் “ஆடியோ மட்டுமுள்ள பதிவுகள்” என்ற வசதியை சமீபத்தில் வெளியிட்டது. இதன்மூலம் பயனர்கள் தங்களது ஃபேஸ்புக் தளத்தில் ஆடியோ பதிவுகளை குரல் வழித்தகவலாக பகிரலாம் என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்த தொழில்நுட்பம் தங்களுக்கானது, இதை நாங்கள் தான் முதலில் உருவாக்கினோம் என சிங்கப்பூரின் ’வோக்ஸ்வெப்’ பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளது. இதை ஃபேஸ்புக் அதற்கு சாதகமாக பயபடுத்திக்கொண்டதாக ’வோக்ஸ்வெப்’ தெரிவித்துள்ளது.

2016 ஜனவரி செயலி வடிவில் அறிமுகமான ’வோக்ஸ்வெப்’ நிறுவனத்திற்கு தற்போது 2.5 மில்லியன் பயனர்கள் உள்ளனர். கூகுள் ப்ளேஸ்டோரில் ’வோக்ஸ்வெப்’ 1 லட்சம் முறை பயனர்களால் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon