Primary Menu

Top Menu

May 21, 18

பொறியியல் படிப்புக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

பொறியியல் படிப்பில் சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான ஏற்பாடுகளை அண்ணா பல்கலைக்கழகம் செய்துள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 562 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.  இந்த கல்லூரிகளில் பி.இ. அல் லது பி.டெக். படிப்பில் சேர அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்தி வருகிறது.  2 லட்சத்து 60 ஆயிரம் இடங்களில் சுமார் ஒரு லட்சத்து 90 ஆயிரம் இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகின்றன.

இந்த ஆண்டு முதல் பொறியியல் படிப்பில் சேர ஆன்லைன் கலந்தாய்வு முறை அமலுக்கு வருகிறது. அதன்படி 2018-19-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இன்று தொடங்குகிறது. அதில் சேர விரும்பும் மாணவர்கள் https://www.annauniv.edu மற்றும் http://tnea.ac.in என்ற இணையதளங்களில் ஆன்லைனில் பதிவு செய்யலாம். ஜூலை மாதம் முதல் வாரத்தில் ஆன்-லைன் கலந்தாய்வு தொடங்குகிறது.

பதிவு செய்வதற்கு முன்பாக செல்போன் எண், இ-மெயில் முகவரி, 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்று, பிளஸ் 2 ஹால் டிக்கெட் (பதிவு எண்ணுக்காக) 8-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த பள்ளியின் விவரங்கள், சாதிச் சான்றிதழ், ஆதார் எண், பெற்றோரின் ஆண்டு வருமானம், பதிவுக் கட்டணம் செலுத்துவதற்கு டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் விவரம் ஆகிய விவரங்களை தயாராக வைத்திருப்பது நல்லது.

மாணவர்கள் ஆன்லைன் பதிவை முடித்ததும் விண்ணப்பத்தை பிரின்ட் அவுட் எடுத்துக்கொள்ள வேண்டும்.  அவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக உதவி மையங்களுக்கு அழைக்கப்படும்போது, தாங்கள் வைத்திருக்கும் ஆன்-லைன் பிரின்ட் அவுட் விண்ணப்பத்தில் போட்டோ ஒட்டி, கையெழுத்து அங்கேயே சமர்ப்பித்து விடலாம்.

Vaishali

Author of In4 Network from past 3 years, News and Articles with Genre of Cinema, Political, Sports, Business and General in the level of content is Tamilnadu, India and also Globally.

கீரிஸ் நகரின் ஆளூநரை சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்

கிரீஸின் இரண்டாவது பெரிய நகரமான தசலோனிகி...

Leave a Reply