Primary Menu

Top Menu

May 21, 18

ஆர்யாவை நினைத்து அபர்ணதி எடுத்த அதிரடி முடிவு !!

நடிகர் ஆர்யாவுக்கு திருமணம்  நடத்தும் வகையில் ரியாலிட்டி ஷோ ஒன்று நடத்தப்பட்டது. மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட அந்த ஷோவின் இறுதிச் சுற்றுக்கு 3 பெண்கள் தேர்வாகினர். இதில் யாராவது ஒருவரை நடிகர் ஆர்யா திருமணம் செய்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யார் மனதையும் புண்படுத்த விரும்பவில்லை என்று கூறி போட்டியாளர்களை அதிரவைத்தார் ஆர்யா.

ஆர்யா பங்கேற்ற எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் அவரை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தோடு கலந்துகொண்டவர்களுள் ஒருவர் அபர்ணதி. கடைசி சுற்றிற்கு முந்தைய சுற்றில் கடைசியாக எலிமினேட் செய்தனர் அவர்தான் வெற்றிபெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ஒருமையில் பேசுவது, ஓவர் அட்வாண்டேஜ் எடுத்துக் கொள்வது என சில விஷயங்களால் அவரை போட்டியிலிருந்து வெளியேற்றினார் ஆர்யா. தன்னால் வெளியேற முடியாது என அந்த இடத்திலேயே வாக்குவாதத்தில் அபர்ணதி ஈடுபட்டார். பிறகு ஒருவழியாக அவரைச் சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது அளித்துள்ள பேட்டியில், “நான் கல்யாணம் பண்ணமாட்டேன். இன்னும் 40 அல்லது 50 வருடம் இருக்குற லைப்பை ஜாலியா என்ஜாய் பண்ணுவேன். என்னை கல்யாணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தவேண்டாம் என பெற்றோரிடம் சொல்லிவிட்டேன். எனக்கு கல்யாணத்தில் ஆர்வம் இல்லை, அதை தாண்டி எவ்ளோவோ இருக்கு. உலகத்தை சுத்த போறேன்” என கூறியுள்ளார்.

Vaishali

Author of In4 Network from past 3 years, News and Articles with Genre of Cinema, Political, Sports, Business and General in the level of content is Tamilnadu, India and also Globally.

தன்னை பற்றிய கிசுகிசுக்குகள் குறித்து நடிகை அமலாபால்

தன்னை பற்றி எந்தவித கிசுகிசுக்குக்கள்...

Leave a Reply