IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

போதையில் தள்ளாடிய இந்திய குடிமகன்கள்..

0


மதுபோதை தலைக்கேறி தள்ளாடிய இரண்டு குடிமகன்கள் சமூக வலைதளத்தில் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.


குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல்நலத்தை கெடுக்கும் என்ற வாசகத்துடன் தமிழகத்தில் முதன்மையான தொழிலாக டாஸ்மாக் நடைபெற்று வருகிறது. குடிப்பழக்கத்தால் எத்தனை மனிதர்கள் தங்கள் உடல்நலத்தையும் குடும்பத்தையும் இழக்கிறார்கள் என்பதை நன்கு அறிந்தும் மதுவிற்பனையை நிறுத்த அரசு முயற்சிப்பதில்லை. ஏனெனில் அரசிற்கு அதிக லாபம் தரும் துறையாக மதுவிற்பனை சிறப்பாக நடைபெற்று வருவதே காரணம்.


மதுபோதையில் தள்ளாடிக் கொண்டே வரும் ஒருவரை அவருடைய நண்பர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்ல முயற்சிக்கிறார். ஆனால் போதை தலைக்கேறியதில் அவர் தள்ளாடி இருசக்கர வாகனத்தில் ஏற முடியாமல் சுற்றி சுற்றி தள்ளாடி வருகிறார்.

Dubsmash Tamil ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಶನಿವಾರ, ಸೆಪ್ಟೆಂಬರ್ 28, 2019


பின்னர் ஒருவழியாக இருசக்கர வாகனத்தில் ஏறி அமரும் அவர் தள்ளாடி நண்பரையும் சேர்த்து வாகனத்தோடு கீழே தள்ளி விடுகிறார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டாஸ்மாக் மூலம் அரசிற்கு அதிக வருமானம் வருவதால் இதுபோன்ற நடவடிக்கைகளை வேடிக்கை மட்டுமே பார்க்கப்பட்டு வருகிறது.