Primary Menu

Top Menu

September 26, 18

2ஜி ஊழல் தீர்ப்புக்கு எதிராக வைரலாகும் விஜய் பேசிய டயலாக் !!

2ஜி வழக்கில் திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, எம்.பி. கனிமொழி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கு உள்ளான அனைவரும் விடுதலையான நிலையில், விஜய் நடித்த ஒரு திரைப்பட டயலாக் இப்போது வைரலாக சுற்றி வருகிறது.

கடந்த 6 வருடங்களாகவே திமுக மீது 2ஜி ஊழல் கறை சுமத்தப்பட்டே வந்தது. இதனால் தேர்தலில் அக்கட்சிக்கு ஓரளவுக்கு செல்வாக்கு சரிந்தது என்றும் சொல்ல முடியும்.

விஜய் டயலாக் இந்த நிலையில்தான், கத்தி என்ற திரைப்படத்தில், நடிகர் விஜய், 2ஜி என்பது ஊழல் என டயலாக் பேசியிருந்தார். “2ஜின்னா என்ன.. அலைக்கற்றை.. வெறும் காற்றை வைத்து கோடி கோடியாக ஊழல் செய்யும் ஊருய்யா இது” என படத்தில் நிருபர்களிடம் தீவிர கதியில் டயலாக் பேசி அப்ளாஸ் வாங்கியிருப்பார் விஜய்.

விஜய் இவ்வாறு பேசிய டயலாக் தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஜெயா டிவி கத்தி திரைப்பட உரிமையை வாங்கி வைத்துக்கொண்டு, அவ்வப்போது இப்படத்தை ஒளிபரப்பி, திமுகவை சீண்டி வந்தது.

இந்த நிலையில், சிபிஐ சிறப்பு நீதிமன்றம், 2ஜி ஊழல் வழக்கிலிருந்து ராசா உள்ளிட்டோரை விடுதலை செய்துள்ளது. இப்போது நெட்டிசன்கள் கத்தி திரைப்பட காட்சியை எடுத்து போட்டு வைரலாக்கி வருகிறார்கள்.

 

 

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon