Primary Menu

Top Menu

September 20, 18

மிக மிக ஆபத்தான நிலையில் திமுக தலைவர் கருணாநிதி

கலைஞரின் முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாடு தொடர்ந்து மோசமான நிலையில் உள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி மிக மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது.

முதல்வர் பழனிசாமியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகம் முழுவதும் பாதுகாப்பை உறுதிபடுத்த காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி அறிவுறுத்தல் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி உத்தரவு விடுத்துள்ளார்.

சென்னை முழுவதும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மெரினாவில் தற்போது போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   நேற்று காலை முதலே திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் சற்றே பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின
பின்னர் மாலை 6.30 மணியளவில் கருணாநிதியின் உடல்நிலைக் குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கை திமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து காவேரி மருத்துவமனை வெளியே தொண்டர்கள் குவியத் தொடங்கினர். தொண்டர்களை கட்டுப்படுத்த போலீசாரும் தங்களது பாதுகாப்பை பலப்படுத்தினர். அத்துடன் சென்னை முழுவதும் முக்கிய இடங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்திற்கு திடீரென மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். இவரும் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டனர். மு.க.அழகிரி, கனிமொழி, முரசொலி செல்வம், டி.ஆர்.பாலு, ஐ. பெரியசாமி உள்ளிட்டோரும் ஸ்டாலினுடன் வருகை தந்தனர். முதல் அமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் அவர்கள் 20 நிமிடம் ஆலோசனை நடத்தினர். பின்னர் திரும்பி சென்றனர்.
காவேரி மருத்துவமனை பகுதியில் 2 துணை ஆணையர்கள், 4 உதவி ஆணையர்கள் தலைமையில் 200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
திமுக மூத்த நிர்வாகிகளுடன் கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடமாகி உள்ள நிலையில் அடுத்ததாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே மாலை 6 மணிக்கு பிறகு காவேரி மருத்துவமனையில் இருந்து கருணாநிதி உடல் நிலை குறித்த முக்கிய செய்திகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய ஏற்பாடுகள் செய்வது குறித்தே திமுக தலைமை நிலைய மேலாளர்கள் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Comments

விமானத்தை முந்திச் சென்ற மோட்டார் சைக்கிள்! – விநோதமான போட்டி

துருக்கியில் நடைபெற்ற வினோத போட்டியில்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon