Primary Menu

Top Menu

September 21, 18

அரசியலை கற்றுக்கொள்ள பள்ளியில் மாணவர் பாராளுமன்ற தேர்தல்!!

மாணவர்களுக்கு ஆளுமை திறனை வளர்க்கும் சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 15 வருடங்களாக மாணவர்களுக்கு மாணவர் பாராளுமன்றத்தை உருவாக்கி அவர்களுக்கு நிர்வாகத்திறனை வளர்த்து வருகிறது. நேற்று நடைபெற்ற தேர்தலில் 3ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் வாக்களித்து நிர்வாகிகளை தேர்வு செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள
சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆத்தூர் வட்டாரத்தில் புகழ்பெற்ற பள்ளியாக உள்ளது. இப்பள்ளி நிர்வாகம் மாணவ மாணவியர்கள் நலனில் அக்கறை கொண்டு அவர்களின் தனித்திறமையை கண்டறிந்து மேம்படுத்தி வருகிறது. குறிப்பாக விளையாட்டு விஞ்ஞானம், அறிவியல் கண்டுபிடிப்புகளில் மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது.

சிறப்பாக மாணவர்களின் நிர்வாகத்திறனை மேம்படுத்தவும் பொது அறிவில் அவர்கள் மேன்மை அடையவும் கடந்த 15 வருடங்களாக பள்ளியில் மாணவர்கள் பாராளுமன்றம் என்ற அமைப்பை உருவாக்கி மாணவர்களை பங்குபெற செய்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் தேர்தல் நடத்தி மாணவர் தலைவர், கல்வி அமைச்சர், விளையாட்டுதுறை அமைச்சர், நிதியமைச்சர் உட்பட பல்வேறு பொறுப்புகளை உருவாக்கி அதற்காக மாணவ மாணவியர்களை வாக்களிக்க செய்கிறது.

3ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பள்ளி தலைவர் மற்றும் இதர பொறுப்புகளுக்கு போட்டியிடுபவர்களை தங்கள் விருப்பப்படி தேர்வு செய்ய தேர்தல் நடத்தி வருகிறது. 3 மற்றும் 4ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஆசிரியை உதவியுடன் வாக்களிக்கின்றனர். மற்ற வகுப்பு மாணவர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களை தேர்வு செய்ய வாக்களிக்கின்றனர். இது தவிர எதிர்க்கட்சி தலைவர்களையும் தேர்வு செய்கின்றனர்.

இது குறித்து பள்ளி முதல்வர் என். திலகம் கூறுகையில் கடந்த 14 வருடங்களாக எங்கள் பள்ளியில் மாணவர்கள் பாராளுமன்ற என்ற அமைப்பை உருவாக்கி அதில் மாணவர்களை பங்குபெற செய்து வருகிறோம். இதன் மூலம் அவர்களின் நிர்வாகத்திறமை வௌிப்படுவதோடு அரசியல் மற்றும் அவர்களின் பணிகளை பற்றி அறிந்து கொள்வார்கள். குறிப்பாக பிறருக்கு உதவும் மணப்பான்மையை வளர்த்துக் கொள்வார்கள் என்றார். மாணவர் தலைவராக மார்கஸ் மெல்வின், மற்றும் மோதிகா ஸ்ரீயும், கல்வி அமைச்சராக ஜி.பாலகிருஷ்ணனும், உதவி கல்வி அமைச்சராக கௌதமும், தேர்வு செய்யப்பட்டனர். விளையாட்டு துறை அமைச்சராக ஆர்.விஸ்வாவும், சுகாதார துறை அமைச்சராக அகல்யாவும், கலை துறை அமைச்சராக அம்ரித்-ம், மாணவர் கண்காணிப்பு அமைச்சராக அன்பும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பள்ளியில் 3 மற்றும் நான்காம் வகுப்பு மழலைகள் வரிசையில் நின்று வாக்களித்து தங்கள் கையில் வாக்களித்ததற்கான அடையாள மை வைத்தவுடன் சிரித்தபடி சென்றது பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon