Primary Menu

Top Menu

July 16, 18

தோனி இந்தியாவின் பிரதமரானால் எப்படியிருக்கும் – விக்னேஷ் சிவன்

‘தோனி, என்றாவது ஒருநாள் இந்தியாவின் பிரதமரானால் எப்படியிருக்கும்…’ என்று எதிர்பார்ப்புடன் கூறியுள்ளார் விக்னேஷ் சிவன்.

ஐபிஎல் 2018-ன் இறுதிபோட்டி நேற்று நடைபெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் – ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின. இரண்டு வருடங்களுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் களத்தில் இறங்கியதால், போட்டி எப்படி இருக்கும்? கோப்பையை வெல்லப்போவது யார்? என கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

இந்தப் போட்டியில், முதலில் பவுலிங்கைத் தேர்வுசெய்த சென்னை சூப்பர் கிங்ஸ், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், ஐபிஎல் கிரிக்கெட்டில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று, கோப்பையைக் கைப்பற்றி இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

இந்த வெற்றியை, நேற்று இரவே பலரும் வெடி வெடித்துக் கொண்டாடினர். பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் தங்களுடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். இயக்குநர் விக்னேஷ் சிவன் , “தோனி, என்றாவது ஒருநாள் இந்தியாவின் பிரதமரானால் எப்படியிருக்கும்… மிகச்சிறந்த தலைவர், மிகச்சிறந்த மனிதர். எத்தனை வருடங்கள் ஆனாலும், தன் மீது ஒரு புகார் கூட இல்லாத தூயவர்.

அவர் இன்னும் மிகப்பெரிய அளவில் வரவேண்டும். எதிர்காலத்தில் மிகச்சிறந்த விஷயங்களைச் செய்ய வேண்டும். விளையாட்டில் மட்டுமல்ல, நாட்டுக்காகவும்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.

 

வைரலாகும் சர்கார் படத்தில் யோகி பாபுவின் புதிய கெட்-அப்!

சர்கார் படத்தில் நடிக்கும் யோகி பாபுவின்...

Leave a Reply