Primary Menu

Top Menu

September 21, 18

தனுஷ் நடிக்கும் வடசென்னை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வடசென்னை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கும் படம் “வட சென்னை”.கேங்க்ஸ்டர் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தை 3 பாகமாக எடுக்க இருக்கிறார்கள் .  முதல் பகுதி 1980களில் நடப்பது போன்ற கதைக்களமாம். அந்த பார்ட் 1 ஷூட்டிங் முடிவடைந்த நிலையில்  படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பிரபல பத்திரிக்கை ஒன்றில் இப்படத்தினை பற்றிய சில விஷயங்கள் வெளியாகியுள்ளன. அதனை போட்டோ எடுத்து ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகிவிட்டனர் தனுஷ் ரசிகர்கள்.

வடசென்னை 35 வருஷ வாழ்க்கையின் கதை. இப்படத்தின் முதல் பாகம் ஜூன் மாதம் வெளியாகிறது. தனுஷ் தேசிய அளவில் காரம் போர்டு சாம்பியனாக நடித்துள்ளாராம். தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ். தனுஷ் அன்புவாக, ஐஸ்வர்யா பத்மாவாக நடித்துள்ளனர். இயக்குனர் சமுத்திரக்கனி குணவாக, இயக்குனர் அமீர் ராஜனாக, ஆண்ட்ரியா சந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தில் மொத்தம் 4 பாடல்கள். ஒரு தலைவரின் மரணம், கட்சி உடைவது என்று அரசியில் பின்னணயில் வட சென்னை வாழக்கை காட்டுமாம் இப்படம்.

 

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon