Primary Menu

Top Menu

September 25, 18

ரசிகர்களை காண தயாராகும் தனுஷ் !!!

நடிகர் விஷால் சமீபத்தில் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் நல இயக்கம் என்று பெயர் மாற்றம் செய்தார். தேவைப்பட்டால் இந்த அமைப்பு அரசியல் கட்சியாக மாறும் என்றும் அறிவித்தார்.

சூர்யா, கார்த்தி, ஆகியோருக்கும் ரசிகர் மன்றங்கள் செயல்படுகின்றன. இப்போது நடிகர் தனுசும் ரசிகர் மன்றத்தில் கவனம் செலுத்துகிறார். சமீபத்தில் தனது ரசிகர் மன்றத்துக்கு பிரபல இயக்குனர் சுப்பிரமணியம் சிவாவை தலைவராக நியமித்தார். சமூக வலைத்தளங்களிலும் தனது படங்கள் பற்றிய தகவல்களை பகிரவும் விளம்பரப்படுத்துவும் ரசிகர் குழுக்களை நியமித்து இருக்கிறார்.

இந்த நிலையில் அடுத்த மாதம் ரசிகர்களை தனுஷ் சந்தித்து பேசுகிறார். அப்போது புதிய திட்டங்களை அவர் அறிவிப்பார் என்று தெரிகிறது. தனுஷ் தற்போது வடசென்னை, மாரி–2, என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய 3 படங்களில் நடித்து வருகிறார். என்னை நோக்கி பாயும் தோட்டா தீபாவளிக்கு வெளியாகிறது.

Comments

சிம்டாங்காரன் என்றால் என்ன? விவேக் விளக்கம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon