IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

டெங்குவை விரட்ட இந்த இலையின் சாறு குடித்தால் போதும்!

192


கோடைகாலம் முடிந்து மழைக்காலம் தொடங்கி விட்டது. டெங்கு, மலேரியா போன்ற விதவிதமான வைரஸ் காய்ச்சல்களும் பரவத் தொடங்கி விட்டன. அரசாங்கமும் டெங்குவை எதிர்கொள்ள தயாராகி விட்டது. அரசு மருத்துவமனைகளில் பிரத்யேக வார்டுகள் அமைக்கப் பட்டுள்ளன. காய்ச்சல் அறிகுறி வந்தாலே டெங்குவாக இருக்குமோ? என்று அச்சம் கொள்ளும் அளவுக்கு கடந்த ஆண்டுகளில் மக்களை படுத்தி எடுத்திருக்கிறது டெங்கு.


இந்த டெங்கு காய்ச்சல் ஏடிஸ் ஆஜிப்டி எனும் கொசு கடிப்பதால் தான் பரவுகிறது. டெங்கு காய்ச்சலுக்கு இப்போது வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. நம் இரத்தத்தில் உள்ள பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறைவதாலேயே உடலில் பல்வேறு கோளாறுகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.


இந்த காய்ச்சல் வந்தால் தோன்றும் முதல் அறிகுறிகள் தலைவலி, கை, கால், உடம்பு வலி மற்றும் மிக கடுமையான காய்ச்சல் ஆகும். இக்காய்ச்சல் வந்தால் , மிக எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். டெங்கு வராமல் தங்களை காத்து கொள்ள கொசு கடிக்காமல் பார்த்து கொள்ள வேண்டியது அவசியம்.


தற்போது பருவ நிலை மாற்றங்களால் பல இடங்களில் இந்த காய்சல் பரவி வருகிறது. இந்த காய்சல் சிறியவர்கள் முதல் பெறியவர்கள் வரை பரவி வருகின்றது. அதனால் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அனுக வேண்டியது அவசியம். டெங்கு காய்சலுக்கு உள்ளானோர் உயிரிழப்பதற்கு முக்கிய காரணம் இரத்ததில் உள்ள பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறைவதே ஆகும். எனவே அதை அதிகரிக்க செய்வது மிக அவசியம்.

Related Posts
1 of 4


மனிதனுக்கு சராசரியாக இரத்ததில் ஒரு மைக்ரோ லிட்டருக்கு 1,50,000 முதல் 2,50,000 பிளேட்லெட்டுகள் இருக்கும். ஆனால் டெங்கு காய்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50,000 க்கும் கீழே குறைகிறது. இந்த டெங்குவை குணப்படுத்தும் அதிசய மருந்தாக பப்பாளியின் இலை காணப்படுகிறது. இதில் ஃபைட்டோ நியூண்ட்ரியண்டுகள், என்சைம் போன்ற நிறமிகளும், கால்சியம், பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற கனிமச் சத்துக்களும் அதிகமாக உள்ளது.


பப்பாளி இலையின் சாற்றுடன் தேன் கலந்து குடித்தால் உடலில் பிளேட்லெட்டுகள் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனால் டெங்கு காய்சல் உள்ளவர்கள் இதை தெடர்ந்து குடித்து வந்தால் பிளேட்லெட்டுகள் எண்ணிக்கை அதிகரித்து காய்சல் படிபடியாக குறையும். நமது உடம்பில் உள்ள வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களிடம் எதிர்த்து போராடி, மலேரியா, டெங்குக் காய்ச்சல், புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கிறது.


அன்றாடம் நாம் பப்பாளி இலைச் சாற்றினைக் குடித்து வந்தால், அது நமது உடம்பின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கச் செய்து, உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் தடுக்கப் படும்.


#dengue #fever #cure #tips