Primary Menu

Top Menu

June 24, 18

பெண் புரோக்கரான கல்லூரி பேராசிரியை சஸ்பெண்ட் : பின்னணியில் இருக்கும் அதிகாரிகள் யார்?

கல்லூரி மாணவிகளை படுக்கைக்கு அழைத்து புரோக்கர் போல் செயல்பட்ட பேராசிரியை ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தேவாங்கர் கலைக்கல்லூரியில் கணித பேராசிரியராக பணியாற்றுபவர் டாக்டர்.நிர்மலாதேவி. இவர் தனது வகுப்பில் படித்து வரும் 4 மாணவிகளை அழைத்து உயரதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறும் இதனால் பணம், சலுகைகள் உள்பட பல்வேறு பயன் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

ஆனால் அந்த 4 மாணவிகள் இதற்கு மறுப்பு தெரிவிக்கவே, மறைமுகமாக பேராசிரியை அந்த மாணவிகளை மிரட்டியுள்ளார். இந்த நிலையில் பேராசிரியை மாணவிகளிடம் இதுகுறித்து பேசிய 19 நிமிட ஆடியோ இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பேராசிரியை தேவி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் தான் பேசியது மாணவிகளால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக பேராசிரியை தேவி விளக்கம் அளித்தார். இருப்பினும் அவரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. பேராசிரியை ஒருவரே உயரதிகாரிகளுக்கு புரோக்கர் போல் செயல்பட்டதாக கூறப்படும் இந்த விவகாரத்தால் மாணவிகளின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பேராசிரியை நிர்மலா, மாணவிகளுடன் நடத்திய விபரீத உரையாடலின் பின்னணியில் இருக்கின்ற மதுரை காமராஜர் பல்கலைக்கழக அதிகாரிகள் யார்? என்பதை கண்டறிந்து கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் பயிருக்கு பாதுகாப்பாய் இருக்க வேண்டிய, வேலியே பயிரை மேயச்சொன்ன இந்த விபரீத சம்பவம் குறித்து உயர்கல்வித்துறை விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

 

கைலாஷ் யாத்திரைக்காக மத்திய அரசிடம் ராகுல் விண்ணப்பம்

கைலாஷ் மானசாரோவர் யாத்திரை செல்வதற்காக...

Leave a Reply