Primary Menu

Top Menu

September 26, 18

தேங்காய் எண்ணெயின் நன்மைகள் !!

தரமில்லாத பொருட்களால் ஏற்படும் பாதிப்பினைத் தவிர்க்க இயற்கையே நமக்கு பல நல்ல பொருட்களை அளித்துள்ளது. அதில் ஒன்றுதான் தேங்காய் எண்ணெய். தேங்காய் எண்ணெயினை சமையலில் உபயோகப்படுத்துங்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

உடல் ஆரோக்கியத்திற்கு உடலுக்கு ‘மசாஜ்’ செய்வதும் பரிதுரைக்கப்படுகின்றன. அதிலும் தேங்காய் எண்ணெய் கொண்டு உடலில் மசாஜ் செய்வது வலி நீக்கவும், உடல் வீக்கத்தினைக் குறைக்கவும் உதவுகின்றது.

உதடுகள் வெடிப்பு, வறண்டு விடுதல் இவற்றிற்கு விலை அதிகமான பொருட்கள் வாங்கி உபயோகிக்க வேண்டும் என்பதில்லை. ஒரு சொட்டு தேங்காய் எண்ணெயுடன் ஒரு சொட்டு நீர் கலந்து தடவி வந்தாலே போதும்.

கர்ப்ப காலத்தில் அடிக்கடி வயிற்றில் தேங்காய் எண்ணெய் மிதமாய் தடவி குளிக்க பிரசவத்திற்குப் பிறகு வயிற்றில் ஏற்படும் வரிகள் வெகுவாய் குறையும் என இயற்கை வைத்தியம் வலியுறுத்துகிறது.
வெயிலில் சென்று சருமம் வாடி வதங்கினால் சிறிது தேங்காய் எண்ணெய் தடவுங்கள். வெயில் எரிச்சல் அடங்கும். கொலஜன் நன்கு உருவாகி சருமத்தினை இளமையாக வைக்கும்.

தேங்காய் எண்ணெக்கு கிருமி, பூஞ்சை பாதிப்பு தவிர்ப்பு ஆகிய குணங்கள் இயற்கையிலேயே இருப்பதால் தான் இதனை உடலில் தடவி குளிக்கச் சொல்கிறார்கள்.

Comments

தினமும் நைட் செஞ்சா, சீக்கிரம் வெள்ளையாவீங்க…

அனைத்து பெண்களுக்குமே நல்ல அழகான மற்றும்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon