Primary Menu

Top Menu

September 24, 18

சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்தில் பல மாற்றங்கள்-தேசிய நெடுஞ்சாலை

சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு அப்பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. எதிர்ப்புக்கு மத்தியில் சாலை அமைக்கும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த திட்டத்துக்கு எதிராக பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், 8 வழிச்சாலை திட்டதில் பல மாற்றங்களை செய்துள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அந்த அறிக்கையை சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது:-
சேலத்தில் உள்ள கல்வராயன் மலை பாதிக்காதவாறு செங்கம் – சேலம் சாலை வழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வனப்பகுதியில் 13.2 கி.மீ.க்கு பதில் 9 கி.மீ. தூரம் மட்டுமே சாலை அமைக்கப்படும்.
300 ஏக்கருக்கு பதில் 103 ஏக்கர் வனப்பகுதி மட்டும் கையகப்படுத்தப்படும். வனப்பகுதியில் 70 மீட்டருக்கு பதில் 50 மீட்டர் அகலத்தில் சாலை அமைக்கப்படும். திட்ட மதிப்பீடு  10 ஆயிரம் கோடியில் இருந்து 7210 கோடியாக குறைப்பு. முதல் கட்டமாக 6 வழிச்சாலை மட்டுமே போடப்பட உள்ளது. பின்னர், தேவைக்கு ஏற்றது போல 8 வழிச்சாலையாக மாற்றப்படும்.
Comments

புதுச்சேரியில் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் அறிமுகம்

புதியதாக அறிமுகப்படுத்துள்ள ஆயுஷ்மான்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon