Primary Menu

Top Menu

April 24, 18

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஓய மாட்டோம்! – மு.க.ஸ்டாலின்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

காவிரி விவகாரம் தொடர்பாக காமராஜர் சாலையில் மறியலில் ஈடுபட்டு கைதான, திமுக செயல்தலைவர் ஸ்டாலின் புரசைவாக்கத்தில் உள்ள மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கி.வீரமணி, திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்டோரும் மண்டபத்தில்
தங்கவைக்கப்பட்டுள்ளனர். கைதாகி அடைத்து வைக்கப்பட்டிருந்த திருமண மண்டபத்தில் மணமக்களுக்கு திருமணம் செய்து வைத்தார் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்

 

மு.க.ஸ்டாலின் பேட்டி :

ஏப்.7ம் தேதி காவிரி மீட்பு பயணத்தை திருச்சி முக்கொம்பிலிருந்த தொடங்க உள்ளோம்
நாளை அனைத்துக்கட்சி கூட்டம் போராட்டம் தீவிரமடைவதை தொடர்ந்து நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும். இன்று மாலை நடைபெறவிருந்த அனைத்துக்கட்சி கூட்டம் நாளைகாலை 10.30 மணிக்கு நடக்கும்

மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவு :

காவிரி நம் பிறப்புரிமை. அதனை தட்டிப் பறிக்க முயலும் மத்திய பாஜக அரசிற்கு எதிராகவும், அதற்குத் துணை போகும் குதிரைபேர அதிமுக அரசிற்கு எதிராகவும் மாநிலம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. #CauveryManagementBoard அமைக்கும் வரை ஓய மாட்டோம்!

 

Vaishali

Author of In4 Network from past 3 years, News and Articles with Genre of Cinema, Political, Sports, Business and General in the level of content is Tamilnadu, India and also Globally.

Leave a Reply