IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

டிரைவரை கொன்று காரை கடத்தும் கும்பல்! வாடகை கார் ஓட்டுனர்களுக்கான எச்சரிக்கை மணி!!

14


காரை கடத்துவதற்காக டிரைவரை கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை போலீசார் விசாரணை செய்த போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளது.


ராமநாதபுரத்தை சேர்ந்தவர் நாகநாதன் (வயது 51). இவர் சென்னை அசோக் நகரில் உள்ள டிராவல்ஸ் ஒன்றில் 9 ஆண்டுகளாக டிரைவர் வேலைப் பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர்.



கடந்த மாதம் 15-ம் தேதி, மதுரை கொட்டாம்பட்டி அருகே உள்ள பெரியாறு பிரிவு பாசன கால்வாயில் உடல் அழுகிய நிலையில் டிரைவர் நாகநாதன் கிடந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை செய்ய தொடங்கினர். அப்போது கடந்த 5-ம் தேதி சென்னையில் இருந்து குற்றாலத்திற்கு டிராவல்சில் இருந்து ஒரு காரை எடுத்து ஒரு பெண் உள்பட 4 பேரை அழைத்து சென்றுள்ளார். குற்றாலத்தில் இருந்து கடந்த 9-ம் தேதி வருவதாக கார் உரிமையாளரிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் கூறியபடி வரவில்லை.


இதனால் கார் உரிமையாளருக்கு சந்தேகம் வந்துள்ளது. அவருடைய போனுக்கு போன செய்து பார்க்கும் போது அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இது குறித்து உடனடியாக அசோக் நகர் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வந்த போது, பெரியாறு பிரிவு பாசன கால்வாயில் கடந்த சடலம் டிரைவர் நாகநாதன் என்பது தெரிவ வந்தது. அதன் பிறகு அவருடைய சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


பிரேத பரிசோதனையில் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. மதுரை மாவட்ட சூப்பிரண்டு தலைமையில் 2 தனிப்படை அமைத்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவரை கடைசியாக அழைத்து சென்றவர்கள் தான் அவரை கொலை செய்தா போலீசாருக்கு தெரியவந்தது. திருச்சியை சேர்ந்த ஜெயசுதா (வயது 30). இவர் ஆந்திராவில் எல்.எல்.பி., படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். பெரோஸ் அகமது (வயது 34), புதுக்கோட்டை விராலிமலை சேர்ந்த ஹரிகரன் (வயது 30), காஞ்சீபுரம் வடகலையை சேர்ந்த ஜெகதீசன் (வயது 24) ஆகியோரை போலீசார் கைது செய்து கிடுக்கு பிடி விசாரணை மேற்கொண்டனர்.

இஸ்ரோ விஞ்ஞானி கொலையின் பின்னணி என்ன?


இந்த விசாரணையில் அவர்கள் பல அதிர்ச்சி தகவல்களை கூறினர். இதில் கைதான பெரோஸ் அகமதும் ஜெயசுதாவும் ஒன்றாக படித்தவர்கள். ஹரிகரன் பெரோஸ் அகமதுவின் நண்பர் ஆவார். ஜெயசுதா சென்னையில் மசாஜ் சென்டர் ஒன்று நடத்தி நன்றாக சம்பாதித்து வந்தார். அதன் பிறகு பெரோஸ் அகமதுவுடன் சேர்ந்து புச்சேரியில் ஹோட்டல் ஒன்று தொடங்கினார். அந்த ஓட்டலில் வேலை பார்த்தவர் ஜெகதீசன்.


ஹோட்டல் தொழிலில் போதிய லாபம் கிடைக்கவில்லை. இதனால் வேறு எதும் செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்று 4 பேரும் முடிவு செய்தனர். பிறகு கார்களை கடத்தி அதை விற்று பணம் சம்பாத்திக்களாம் என திட்டம் தீட்டியுள்ளனர். அதில் முதலில் சிக்கியவர் தான் நாகநாதன் என்று கூறினர்.



அவரை கொலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்து, அவருக்கு ஓய்வு கொடுக்காமல் காரை ஓட்ட வைத்துள்ளனர். பின்னர் திரும்பி வரும் வழியில் கொட்டம்பட்டி அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வண்டியை திடீரென்று நிறுத்தியுள்ளனர். திடீரென டிரைவர் நாகநாதனை பின்புறத்தில் இருந்து தாக்கியுள்ளனர். அவரை கத்தியால் சரமாரியாக குத்தி, கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர். பிறகு பெரியார் பிரிவு கால்வாய் அருகே உடலை தூக்கிவீசிவிட்டு காரை கடத்தி சென்றுள்ளனர். திருச்சியில் ஒருவரிடம் ரூ.20 ஆயிரம் முன்பணம் பெற்றுக் கொண்டு கடத்திய காரை விற்று விட்டனர். அதன் பின் 4 பேரும் சென்னை சென்று அங்கிருந்து ஆந்திரா, கோவை, பெங்களூரு போன்ற இடங்களுக்கு சென்றுவிட்டனர். மீண்டும் சென்னை வரும் போது 4 பேரும் சிக்கியுள்ளனர். மேலும் போலீசார் அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

#driver #murder #women #carrobbery #madurai #chennai