Primary Menu

Top Menu

September 26, 18

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட  குழந்தைகளை குணப்படுத்த முடியும் – டாக்டர். டி. காசி விஸ்வநாதன்

குழந்தைப்பருவத்தில் ஏற்பட்ட  புற்றுநோய்க்கு சிகிச்சையின் மூலம் குணமடைந்து வாழ்பவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியை மதுரைமீனாட்சி மிஷன் மருத்துவமனை ஆராய்ச்சி மையம், ஒரு கொண்டாட்ட நிகழ்வாக இன்றைய தினம் சிறப்பாக நடத்தியது.

புற்றுநோய்களிலிருந்து மீண்ட குழந்தைகள்     200-க்கும் அதிகமான பதின் பருவத்தினர்  அவர்களுடைய பெற்றோருடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுஅவர்கள் எதிர்கொண்ட சிகிச்சை மற்றும் வாழ்வியல் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியின்போதுபுற்றுநோயிலிருந்து மீண்டுதேர்வுகளில் மிக சிறப்பாக சாதனை படைத்த மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

 இந்த கொண்டாட்டத்தின்போதுபுற்றுநோயிலிருந்து மீண்ட குழந்தைகளுக்காக பல்வேறு கலாச்சார போட்டிகள் செவிலியர்களின்உதவியுடன்  மிகச்சிறப்பாக நடத்தப்பட்டன. பார்வையாளர்களை பரவசப்படுத்திய மேஜிக் ஷோ உட்பட பல கேளிக்கை நிகழ்ச்சிகளும் இதில் இடம்பெற்றன.டாக்டர். டி. காசி விஸ்வநாதன்  “வாழ்க்கையை கொண்டாடும் இவ்விழாவில் அங்கம் வகிப்பது, வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு தருணமாகும். இங்கு பங்கேற்றிருக்கும் குழந்தைகள் மன வலிமைக்கும் மற்றும் உறுதிக்கும் சிறந்த எடுத்துக்காட்டுகளாக  திகழ்கின்றனர்.

இந்த குழந்தைகளை வாழ்த்தி பாராட்டுவது மற்றும் அவர்களுக்குத் தேவையான மருத்துவ மற்றும் உளவியல் ரீதியிலான ஊக்கத்தையும் வழங்குவது மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் தருகிறது,” என்றார்.

 2010-ல் குழந்தைப்பருவ குருதியியல் – புற்றுநோயியல் துறை தொடங்கப்பட்டதிலிருந்து, புற்றுநோயுள்ள 800 குழந்தைகளுக்கு சிகிச்சையளித்துள்ளது. வயதுவந்தவர்களுக்கான புற்றுநோய் போலல்லாமல், குழந்தைப்பருவ புற்றுநோய்கள் அதிகளவில் குணப்படுத்தக்கூடியவை.  எங்களால் 75% குழந்தைகளை குணப்படுத்த முடிந்திருக்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் முன்கூட்டியே குழந்தை புற்றுநோய் மையத்திற்கு அழைத்துவரப்பட்டால் குணப்படுத்தக்கூடிய சதவீதம் 85%தை  தொடக்கூடும். நாங்கள் சிகிச்சையளித்த  குழந்தைகளில்  80 விழுக்காட்டினர் ஏழ்மையான சமூக பொருளாதார பின்னணியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சிகிச்சைக்கு ஆகும் பெரும்பாலான செலவு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உதவி தேவைப்படுகிற மற்றும் ஏழை குழந்தைகளின் நலனுக்காக எங்கள் மருத்துவமனையால் உருவாக்கப்பட்ட “கமீலா குழந்தைகள் புற்றுநோய் நிதியத்திலிருந்து” எதிர்கொள்ளப்படுகிறது.

Comments

வங்கிகளின் வாராக்கடன் குறைவு – அருண்ஜெட்லி

மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon