Primary Menu

Top Menu

June 23, 18

பெண்கள் அச்சமின்றி உலகை எதிர்கொள்ள வேண்டும் – கனடா பிரதமரின் மனைவி

இளம்பெண்கள் அச்சமின்றி உலகை எதிர்கொள்ள வேண்டும் என இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள கனடா பிரதமரின் மனைவி சோபி கிரிகோரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஒரு தொண்டு நிறுவனம் சார்பில் பள்ளி மாணவியருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கனடா பிரதமரின் மனைவி சோபி கிரிகோரியும் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பெண்கள் மனிதநேயத்தின் கருப்பொருளாகத் திகழ்வதாகக் குறிப்பிட்டார். இளம்பெண்கள் அச்சமின்றித் தலைநிமிர்ந்து உலகை எதிர்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். பெண்களும் இந்தச் சமூகத்தின் முழுப் பங்களிப்புள்ள குடிமக்களே எனக் குறிப்பிட்டார்.

Leave a Reply