Primary Menu

Top Menu

September 23, 18

அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் கனடா பிரதமர்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் தனது குடும்பத்தினருடன் வழிபாடு செய்துள்ளார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசுமுறை பயணமாக தனது குடும்பத்தினருடன் கடந்த 17-ம் தேதி இந்தியா வந்தடைந்தார்.

பின்னர் டெல்லியில் உள்ள  தாஜ்மஹாலுக்கு குடும்பத்தினருடன் சென்று சுற்றிப்பார்த்துள்ளார். அதனை பின்னர் குஜராத் சென்ற அவர் காந்தி ஆசிரமத்திற்கு சென்று பார்வையிட்டார். இந்நிலையில் சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக  இன்று பஞ்சாப் மாநிலம் சண்டிகர் வந்தடைந்த அவர் அம்மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங்கை சந்தித்து பேசியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோயிலுக்கு ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்தினருடன் சென்று வழிபாடுகளை செய்துள்ளார். கோயிலில் வழிபாடுகளை முடித்த அவர் உணவு தயாராகும் இடத்திற்கு சென்று சப்பாத்தி செய்யும் பணியில் ஈடுப்படுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Comments

தீவுப்பகுதியில் குடியேற்றப்படும் 1 லட்சம் ரோஹிங்கியாக்கள்

மியான்மரை ஒட்டியுள்ள வங்கதேச பகுதியில்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon