Primary Menu

Top Menu

September 22, 18

தொழில் தொடங்க எளிதான நடைமுறைகளை கொண்ட இந்தோ-சீனா

உலகில் தொழில் தொடங்க எளிதான நடைமுறைகள் கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தையும் இந்தியா இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளது.
இந்த தகவல் சர்வதேச சில்லரை வர்த்தக மேம்பாடு குறியீடு 2016 அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இதன்படி தொழில் தொடங்க எளிதாக உள்ள 30 நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாமிடத்தை பெற்றிருப்பது ஒருபுறமிருந்தாலும் கடந்த ஆண்டு 13வது இடத்தில் இருந்து இந்தியா முன்னேறியுள்ளது சிறப்பம்சம்.

சர்வதேச அளவில் சில்லரை வர்த்தகத் துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடு சார்ந்து 30 வளரும் நாடுகளை ஜிஆர்டி குறியீடு அறிக்கை பட்டியலிட்டுள்ளது.

இந்தியா இரண்டாமிடம் பிடித்ததற்கான காரணங்கள் !

ஜிடிபி வளர்ச்சி, அந்நிய நேரடி முதலீடுகளை அனுமதிப்பதில் சிறப்பான வெளிப்படைத்தன்மை, மற்றும் தொழில் தொடங்குவதற்கு உள்ள கட்டுப்பாடுகள் போன்றவை இந்த பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்துக்கு வர காரணமாக அமைந்துள்ளன.

மேலும் சில்லரை வர்த்தகர்களின் வருகையால் இந்தியாவுக்கு முக்கிய இடம் கிடைத்துள்ளது. இது இந்தியாவின் சில்லரை வர்த்தகத்துறை மீது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இதன் மூலம் பரந்த அளவில் பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்று நுகர்வோர் துறை மற்றும் சில்லரை வர்த்தகப் பொருட்கள் குழுவின் இந்திய, தெற்காசிய நாடுகளில் துணைத்தலைவரும், சர்வதேச நிர்வாகவியல் ஆலோசனை நிறுவனமான ஏடி கிர்னே நிறுவனத்தின் பங்குதாரருமான தேபஷிஸ் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவினுடைய சில்லரை வர்த்தகச் சந்தையின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 2013 – 2015 ஆண்டுகளில் விரிவடைந்து 8.8 சதவீதமாக உள்ளது. ஆண்டு விற்பனை 1 லட்சம் கோடி டாலரை விடவும் அதிகரித்துள்ளது என்று ஏடி கிர்னே நிறுவனம் கூறியுள்ளது.

இந்திய சில்லரை வர்த்தகத் துறையின் வளர்ச்சி இ-காமர்ஸ் துறைக்கும் பயனளிக்ககூடியது. சர்வதேச அளவில் இணையதள வர்த்தகத்தில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon