Primary Menu

Top Menu

September 25, 18

செல்போன் பேசியபடி ஓட்டிய டிரைவருக்கு நூதன தண்டனை வழங்கிய போலீஸ்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், செல்போன் பேசிய படி தனியார் பஸ் ஓட்டிய டிரைவருக்கு போக்குவரத்து போலீசார் நூதன தண்டனை அளித்தனர்.

பொள்ளாச்சி புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து நேற்று முன்தினம், மீனாட்சிபுரம் நோக்கி தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது. அதில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். முள்ளுபாடியை சேர்ந்த டிரைவர் முருகானந்தம்(28) என்பவர் பேருந்தை ஓட்டினார். பயணத்தின் போது டிரைவர் முருகானந்தம் தனது செல்போனில் பேசியபடியே பேருந்தை ஓட்டியுள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள், செல்போன் பேசியபடி வண்டி ஓட்டினால் பயணிகளின் உயிருக்கு உத்தரவாதம் இருக்காது. எனவே செல்போன் பேசுவதை தவிர்க்கும்படி கூறியுள்ளனர். ஆனால் பயணிகளின் கோரிக்கையை கண்டு கொள்ளாமல் டிரைவர்  முருகானந்தம் மீண்டும் தொடர்ந்து ஒரு கையில் செல்போனை பேசியபடி மற்றொரு கையால் பேருந்தை ஒட்டினார். இதனால், பேருந்தில் பயணித்த பயணிகள் சிலர் இதை செல்போனில் படம் பிடித்தனர். பின்னர் பயணம் முடிந்து இறங்கிய பின்னர் அதனை பொள்ளாச்சி டிஎஸ்பி.,கிருஷ்ணமூர்த்தியிடம் காண்பித்து முறையிட்டனர்.

இதுகுறித்து டிஎஸ்பி தனியார் பஸ் டிரைவர் முருகானந்தத்தை கண்டித்து பேசினார். இருப்பினும், செல்போன் பேசியபடி பேருந்தை ஓட்டிய டிரைவர் முருகானந்தத்தை ஒரு நாள் முழுவதும் சிக்னலில் போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என நூதன தண்டனையை வழங்கினார். இதையடுத்து, பொள்ளாச்சி- கோவை ரோடு காந்தி சிலை சிக்னல் அருகே நேற்று மதியம் 2 மணியிலிருந்து இரவு 8 மணிவரை, செல்போன் பேசிகொண்டு பேருந்தை ஓட்டிய டிரைவர் முருகானந்தம் போக்குவரத்து சிக்னலில் நின்றபடி வாகனங்களை சீர்படுத்தி ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அவரது செயல்பாடுகளை போக்குவரத்து போலீசார் கண்காணித்தனர். இச்சம்பவம் வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து பயணிகளின் உயிரை அலட்சியமாக எண்ணி செல்போன் பேசியபடி பேருந்து ஓட்டிய டிரைவருக்கு டிஎஸ்பி அளித்த தண்டனையை பொதுமக்கள் மற்றும் பயணிகள் பாராட்டினர்.

Comments

வங்கிகளின் வாராக்கடன் குறைவு – அருண்ஜெட்லி

மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon