IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பிஎஸ்ஹெச் ஹோம் அப்ளையன்சஸ் ஃப்ரண்ட் லோட் வாஷிங்க் மெஷீன் 1 மில்லியன் மைல்கற்கள் சாதனை

0 10


ஐரோப்பவின் மிகப் பெரிய வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிப்பாளரும், துறைசார் நிறுவனங்களுள் உலகளவில் முன்னணி வகிக்கும் நிறுவனமுமாகிய பிஎஸ்ஹெச் ஹோம் அப்ளையன்சஸ் குழுமம், இந்தியாவில் தனது 1 மில்லியனாவது வாஷிங்க் மெஷீன் விற்பனை குறித்த அறிவிப்பை வெளியிட்டது.  தென் இந்திய மெட்ரோ நகரங்கள் தொடங்கி சிறிய நகரங்கள் வரை தற்போது வாஷ்சிங்க் மெஷீன் ஃபார்மேட்டுக்காகத் ஃப்ரண்ட் லோட் மாதிரியைத் தேர்ந்தெடுத்து மகத்தான வரவேற்பு அளிப்பதாக பிஎஸ்ஹெச் தெரிவித்துள்ளது.   


2010இல் இந்தியச் சந்தையில் தடம் பதித்தது பிஎஸ்ஹெச்.  சீமென்ஸ் தயாரிப்புகளை இந்தியாவில் இறக்குமதி செய்யும் நிறுவனமாகத் தொடங்கிப் பின்னாளில் பல்வேறு பாஷ் பொருள்களை பிரிமியம் சந்தையை இலக்காகக் கொண்டு அறிமுகப்படுத்தியது. வாஷிங்க் மெஷீன், குளிர்சாதனம், டிஷ் வாஷர் மற்றும் இந்தியத் தேவைகளைக் கருத்தில் கொண்டு பாஷ் பொருள்களைச் சந்தைப்படுத்த ஆரம்பித்தது.   சென்னை தொழிற்சாலையிலிருந்து அறிமுகமாகும் அனைத்து பாஷ் மற்ற்ம் சீமென்ஸ் வாஷிங்க் மெஷீன்கள் 5 நட்சத்திர மதிப்பு கொண்டவை ஆகும். இந்தியச் சந்தையைக் கருத்தில் கொண்டும், ஒவ்வொரு இந்திய இல்லத்தின் தேவையை நிறைவு செய்யவும்,  உலகத் தரமான ஜெர்மன் பொறியியல் மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம் பாஷ் பொருள்களைத் தயாரிக்கிறது.  


பாஷ் இந்தியாவின் சமீபத்திய விற்பனை மைல்கள் குறித்து அதன் மேலாண் இயக்குனரும், முதன்மை செயல் அதிகாரியுமான நீரஜ் பாஹி கூறுகையில் ‘உலகளவில் பிஎஸ்ஹெச் நிறுவனத்துக்கு இந்தியா முக்கியமான சந்தை ஆகும்.  முதல் முன்னுரிமை வழங்கும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உயர் தரமான பொருள்களை வழங்க வேண்டும் என்பதற்காகத் தீவிர முனைவுகளை மேற்கொண்டு வருகிறோம். இந்தியச் சந்தைக்கு நாங்கள் அளித்த உறுதிமொழிக்கேற்ப  பிஎஸ்ஹெச் இந்திய நுகர்வோருக்காகத் புதுமையான பொருள்களை, வித்தியாசமான அம்சங்களுடன் உலகளவில் முதன் முறையாக இங்கு அறிமுகப்படுத்தி உள்ளது. மிகக் குறுகிய காலத்தில் இந்த மைல்கல் சாதனையை எட்ட, எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்காகவும், தொடர்ந்து அளிக்கும் ஆதரவுக்காகவும், மதிப்பு மிக்க வாடிக்கையாளர்களுக்கு நன்றி செலுத்துகிறோம்’ என்றார்.


#BSH #Home #Appliance #Washing Machine