Primary Menu

Top Menu

August 16, 18

குழந்தை அழுததால் விமானத்திலிருந்து தூக்கி வீசீவிடுவதாக அதிகாரிகள் மிரட்டல்

3 வயது குந்தை அழுதற்காக , அக்குழந்தையுடன் சேர்த்து, இந்திய தம்பதியை இங்கிலாந்து விமான ஊழியர்கள் கீழே இறக்கிவிட்டனர். இது குறித்து மத்திய அரசிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

இந்தியாவை சேர்ந்த ஏ.பி.பாதக் என்பவர், மனைவி, 3 வயது குழந்தையுடன் இங்கிலாந்து தலைநகர் லண்டனிலிருந்து ஜெர்மனியின் பெர்லின் செல்லும் விமானத்தில் பயணித்துள்ளார்.

 

விமானம் கிளம்பும் போது, 3 வயது குழந்தை அழுதுள்ளது. கோபமடைந்த விமான ஊழியர்கள், குழந்தையை மிரட்டியுள்ளனர்.

 

பயந்து போன குழந்தை தொடர்ந்து அழவே, விமானத்தை மீண்டும் விமான நிலையத்திற்கு கொண்டு வந்து, 3 பேருடன், மேலும் சில குழந்தைகளையும் கீழே இறக்கிவிட்டு சென்றனர். இந்தியர்கள் குறித்து அவதூறாகவும், இனவெறியை தூண்டும் வகையிலும் பேசியுள்ளனர்.

 

இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரி மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு வெளியுறவு அமைச்சர் சுஷ்மாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் விமானம் கிளம்பும் போது, தனியாக அமர்ந்திருந்த எனது குழந்தைக்கு சீட் பெல்ட் அணிவித்த போது, அழ துவங்கினான்.

 

எனது மனைவி சமாதானப்படுத்த முயன்ற போது, ஊழியர்கள் திட்டினர். அருகில் இருந்த இந்திய தம்பதி பிஸ்கட் கொடுத்து, குழந்தையை சமாதானபடுத்த முயன்றனர்.

 

குழந்தை தொடர்ந்து அழவே, அங்கு வந்த ஊழியர், ஜன்னல் வழியே வெளியே வீசிவிடுவேன் என மிரட்டினார். தொடர்ந்து விமானத்திலிருந்து எங்களை இறக்கிவிட்டு சென்று விட்டதாகவும் கூறினார். விமான நிறுவனத்திற்கும் புகார் அளித்துள்ளார்.

 

விமான நிறுவன செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்த குற்றச்சாட்டுகளை தீவிரமாக எடுத்துள்ளோம். இது போன்ற செயல்களை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். விரிவான விசாரணை நடந்து வருகிறது என்றார்.

 

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon