Primary Menu

Top Menu

October 18, 18

பாஜகவுக்கு வாக்களித்த 3 மாநில மக்களுக்கு நன்றி

திரிபுரா மக்கள் பாஜகவை ஆதரித்துள்ளதை விவரிக்க வார்த்தைகளே இல்லை, வளர்ச்சி மீது நம்பிக்கை வைத்து மக்கள் பா.ஜ.,விற்கு ஓட்டளித்துள்ளதாக கூறியுள்ள பிரதமர் மோடி, 3 மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.

டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

மக்களின் கனவுகள் மற்றும் நம்பிக்கைகளை நிறைவேற்றும் வகையில் கடினமாக உழைக்க உறுதிபூண்டுள்ளோம் .
2018 திரிபுரா தேர்தல் முடிவுகள் சகாப்த்ததை உருவாக்கிய ஒன்றாக கருதப்படும். எனது திரிபுரா சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் மிகச்சிறப்பான செயலை செய்துள்ளனர். பா.ஜ.,வுக்கு கிடைத்த சாதனை வெற்றிக்கு நன்றி சொல்ல வார்த்தையில்லை. மாநிலத்தை மாற்ற எந்தவொரு வாய்ப்பையும் தவற விட மாட்டோம்.

மாநிலத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து உழைப்பேன் என எனது சகோதர சகோதரிகளுக்கு உறுதியாக தெரிவிக்கிறேன். கடுமையாக உழைத்த பா.ஜ.,வினருக்கு பாராட்டுகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon