திரைப்பிரபலங்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்ததற்கு பாஜக மீது குற்றம் சுமத்துவது தவறு என தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி உட்பட 49 திரைப்பிரபலங்கள் மீது சமீபத்தில் தேசத்துரோக வழக்கு பதியப்பட்டது. இதுதொடர்பாக திரைப்பிரபலங்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்து தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கமளித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, திரைப்பிரபலங்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு பாஜகவிற்கோ அல்லது மத்திய அரசுக்கோ எந்தவித சம்பந்தமும் கிடையாது என பிரகாஷ் ஜவடேகர் மறுப்பு தெரிவித்துள்ளார். மனு ஒன்றின் மீதான விசாரணையில் பீகார் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரிலேயே அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதில் மத்திய அரசையோ அல்லது பாஜகவையோ குற்றம் சாட்டுவது பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு களங்கம் விளைவிப்பது போல் அமைந்துவிடும். மற்றும் பாஜக மீது குற்றம் சுமர்த்தி அரசியல் புரிய சிலர் அற்பமான ஆதாயங்களுக்காகவே இதுபோன்ற கருத்துகளை பரப்பி வருவதாகவும் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
#PrakashJavadekar #BJP #NotInvolve #SeditionCase #Celebrities #In4Net