Primary Menu

Top Menu

September 23, 18

காதலை மறுக்கும் பெண்களை கடத்துவேன் – பா.ஜ.க MLA

உங்கள் காதலை ஏற்க மறுக்கும் பெண்களை உங்களுக்காக கடத்தி வருவேன், அதற்காக என் செல்பேசி எண்ணைக் குறித்துக்கொள்ளுங்கள் என்று பேசிய மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர் ராம் கதமிடம் தேசிய மகளிர் ஆணையம் விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

மும்பை, காட்கோபரில் நடந்த உறியடி நிகழ்ச்சியில் இளைஞர்கள் மத்தியில் பேசிய பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம், உங்கள் காதலை ஏற்க மறுக்கும் பெண்களை உங்களுக்காக கடத்தி வருவேன் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதற்காக தனது செல்போன் நம்பரை குறித்து வைத்து கொள்ளுங்கள் என்று கூறி நம்பரையும் கொடுத்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து ராம்கதம் எம்.எல்.ஏ. தனது கருத்துக்காக வருத்தம் தெரிவித்தார்.

இந்நிலையில் ராம் கதமின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் சுபோத் சாவ்ஜி “இளைஞர்களுக்காக பெண்களை கடத்துவேன் என கூறிய பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதமின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.

ஒரு எம்எல்ஏவிடமிருந்து இது போன்ற விஷயங்கள் வெளிவருவது முறையல்ல. இவ்வாறு பேசிய எம்எல்ஏராம் கதமின் நாக்கை அறுத்து வருபவர்களுக்கு ரூ. 5 லட்சத்தை நான் அளிக்கிறேன்” என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.வழமையாக பாஜக – ஆர்எஸ்எஸ் தரப்பினர் கையாளும் இவ்வாறான வன்முறை பேச்சினை காங்கிரஸ் தலைவர் ஒருவர் பேசியுள்ளது அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.

Comments

இணையத்தில் வைரலாகும் வர்மா பர்ஸ்ட் லுக் போஸ்டர்

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon